பக்கம்:வேத வித்து.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சாவூர் போய்ச் சேர்ந்ததுமே கனபாடிகள் எழுதித் தந்த கடிதத்தைக் கிட்டப்பாவிடம் கொடுத்தான். அதை அவர் பிரித்துப் படித்தார். "கிட்டப்பாவுக்கு ஆசீர்வாதம். உன் கடிதம் படித்தேன். எனக்குப் பூரண சம்மதமே. கெளரி விருப்பப்படியே நடக்கட்டும். ததாஸ்து" என்று சுருக்கமாக எழுதியிருந்தார். "மூர்த்தி உனக்கு மாசாரமெல்லாம் தெரியுமோ? கனபாடிகள் சொன்னாரா?' என்று கிட்டப்பா கேட்டார். 'தெரியும்; உங்க லெட்டரை என்னிடமே கொடுத்துப் படிக்கச் சொன்னார்."

படிச்சயா?"
படிச்சேன்,'

கெளரிக்குப் பிள்ளையாகப் போறதுல உனக்குச் சம்மதம் தானே? கனபாடிகளுக்கு என்ன பதில் சொன்னே?" "கி ண த் து ல விழச் சொன்னாலும் விழத்தயார்னு சொன்னேன்!' - 'எல்லாக் கிணத்துலயும் இப்ப தண்ணியே இல்லாம வறண்டு கிடக்கே, அந்த தைரியமா!' என்று கேட்டுச் சிரித்தார் கிட்டப்பா. அவனும் சிரித்தான். "சரி; கெளரி அத்தைக்கு இன்னைக்கே எழுதிப் போட்டுடறேன். சுபஸ்ய சீக்கிரம்' என்றார் கிட்டப்பா. 'கான் பாடசாலைக்குப் போகட்டுமா?' என்று கேட்டான் மூர்த்தி. "கொஞ்சம் இரு. முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டனே கேத்து அந்தக் கழைக்கூத்தாடிப் பெண் உன்னைப் பார்க்க வந்திருந்தாள். என்ன சமாசாரம்?'னு கேட்டேன். யாரோ சர்க்கஸ்காரனாமே, அவன் அடிக்கடி வந்து அவளை 149

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/154&oldid=918699" இலிருந்து மீள்விக்கப்பட்டது