பக்கம்:வேத வித்து.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிாலையிலிருந்து பாகீரதிக்கு அத்தையின் ஞாபக மாகவே இருந்தது. 'அத்தைக்குத்தான் என் பேர்ல. எத்தனை அ ன் பு: ஊருலேந்து அக்கறையா தாழம்பூ கொண்டு வந்து தலைபின்னி அழகு பார்த்தாளே! அந்தத் துணிச்சலும், அப்பாவை எதிர்த்துப் ப்ேசிச் சமாளிக்கிற தைரியமும் வேறு யாருக்கு வரும்? - 'அத்தை இன்னொரு முறை அந்த மாதிரி எனக்குத் தலைபின்னி விட மாட்டாளா? முர்த்தி எதேச்சையா வந்து என் அலங்காரத்தைப் பார்த்து ரசிக்கமாட்டானா?' என்று உள்ளுக்குள் கொழுந்துவிட்டிருந்த ஆசைக்குக் கற்பனை வடிவம் கொடுத்துப் பார்த்தாள். சமையல் கட்டிலிருந்து, கெய் வாசனையும் தாளிப்பு கெடியும் வீடு முழுதும் கமகமத்தது. ராவ்ஜி சமையல்| கனபாடிகள் 'ராமா!' என்று அணில் பிள்ளையைப் பால் குடிக்க அழைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த கிட்டா "காஞ்சீபுரம் சம்பந்தி யாத்துக்காரா உங்களுக்கு அரும்பாக்கம் லேகியம் கொடுத்தனுப்பிருக்கா. தலை சுத்தல், தள்ளாமை எல்லாம் போயிடுமாம்!" என்றான். 'அரும்பாக்கம் வைத்தியருக்கே இப்ப என் வயசு ஆயிருக்குமே!' என்று சொல்லிக் கொண்டே டப்பாவைத் திறந்து கொஞ்சம் லேகியம் உருட்டிச் சாப்பிட்டார். 158

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/163&oldid=918720" இலிருந்து மீள்விக்கப்பட்டது