பக்கம்:வேத வித்து.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"எல்லாத்தையும் யோசனை பண்ணிண்ேடு ஒரு பிளானோடு தான் வந்திருக்கே!' என்றார் கனபாடிகள். அண்ணா, உன்னோட ரொம்ப நாளாப் பேசணும்னு இருந்தேன். இப்பத்தான் அதுக்கு சக்தர்ப்பம் வாய்ச்சிருக்கு. பாகீரதி விஷயமாத்தான். உனக்கப்புறம் அவ கதி என்னன்னு யோசிச்சுப் பார்த்தயா? உன் காலத்துலயே, அந்தச் சின்னக் குழந்தைக்கு ஏதாவது ஒரு வழி செஞ்சுட வேணாமா?" "அவள் தலையெழுத்து இப்படி ஆயிடுத்தே? அதை கம்மால மாத்தி எழுத முடியா தேl' 'ஏன் முடியாது? ம ைசுவச்சா எழுதலாம்' என்றாள் கெளரி. - நீ என்ன சொல்றே, கெளரி!' "உனக்கப்புறம் அவளை யார் காப்பாத்தப் போறா? அதுக்கு யார் உத்தரவாதம்? அதைப்பத்தி யோசிச்சயா? சின்ன வய்சாச்லே கனபாடிகள் பொண்ணு நடுத்தெருவில கிக்கறாங்கற அபவாதத்துக்கு ஆளாகப் போறயா?” 'தோன் இருக்கயேம்மா. அ ப் ப டி அனாதையாவா விட்டுடுவே?' நான் இருந்தாப் போதுமா? எனக்கும் வயசாறதே! நான் கவலைப்படறது எதைப் பத்தின் னு என்னால உடைச்சுப் பேச முடியலே. கான் சொல்றது உனக்குப் புரியும்னு நினைக்கறேன்.' 'புரியறது. அவளுக்கு மறுபடியும் ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைக்கனுங்கறே, அதானே? அது என்னால முடியாது, சாஸ்திரத்துக்கு விரோதமா நான் எதுவும் செய்யமாட்டேன்.' 'செஞ்சா என்ன ஆயிடும்?" 'கெளரி உனக்கு இவ்வளவு தைரியம் எப்படி வந்தது? என்னிட்டயா இப்படிப் பேசறே? ஊர் உலகம் ஒப்புக்கும்ா! சாஸ்திரம் படிச்சவராம், யாகம் பண்ண வராம்! எல்லாருக்கும் சொல்லுமாம் பல்லி. தான் போய் கழுநீர்ப் பானையில் விழுமாம்'கற கதையா கனபாடிகள் பண்ணிட்டார்னு என்னை ஊர் ஏசாதா? காறித் துப்பாதா?" 162

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/167&oldid=918728" இலிருந்து மீள்விக்கப்பட்டது