பக்கம்:வேத வித்து.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோன் ஒரு பாட்டுப் பாடேன் கேட்கலாம்" என்றாள் கெளரி அத்தை கிட்டப்பாவிடம். கான் என்ன எஸ்.ஜி. கிட்டப்பான்னு நினைப்பா உனக்கு நான் பாடினா எல்லாரும் ஓடுவா!' என்றார் அவர். பாகீரதியை அழகாக அலங்கரித்து முடிந்ததும் கூடத்துக்கு அழைத்துவந்து கிட்டப்பாவுக்கு நமஸ்காரம் பண்ணச் சொன்னாள் அத்தை. - "சீக்கிரமேவ விவாகப் பிராப்திரஸ்து' என்று வாழ்த்தி னார் கிட்டப்பா. - கிட்டப்பா இப்படி வாழ்த்துவார் என்று யாருமே எதிர் பார்க்கவில்லை. 'உன் ஆசீர்வாதம் பலிக்கட்டும். அதுதான் எனக்கு வேண்டியது. பாகீரதி எத்தனை அழகா இருக்கா பார்த்தயர் தங்கப்பதுமை மாதிரி' என்றாள் அத்தை. "பார்க்க வேண்டியவன் பார்த்து சந்தோஷப்பட்டால் சரி' என்று கண் சிமிட்டி மூர்த்தியை ஒாக் கண்ணால் பார்த்தார். வெட்கத்தில் தலைகுனிந்தபடி உள்ளே ஓடிவிட்டாள் பாகீரதி. "கிட்டப்பா ஏன் இப்படி ஜாடைமாடையாப் பேசறார்? இவாளுக்குள்ள ஏதோ பேச்சு கடந்திருக்குமோ!' என்று சந்தேகித்தான் மூர்த்தி.

பாகீரதியை இனிமே பாகீன்னு கூப்பிடாதீங்க' என்றார் கிட்டப்பா. -

"வேற எப்படிக் கூப்பிடறதாம்?" 'முதல் ரெண்டு எழுத்தை விட்டுட்டுப் பின் ரெண் டெழுத்தைச் சொல்லிக் கூப்பிடுங்க. அதான் பொருத்தமா யிருக்கும்' என்று ஒரு புதிர் போட்டு மகிழ்ந்தார் கிட்டப்பா. "கிட்டப்பாவுக்குத்தான் இப்படியெல்லாம் சாதுர்யமா வேடிக்கையாப் பேசத் தெரியும். தஞ்சாவூரோன்னோ?' என்றார் கெளரியின் கணவர். - 173

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/178&oldid=918752" இலிருந்து மீள்விக்கப்பட்டது