பக்கம்:வேத வித்து.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

球 கதை முடிகிறபோது மணி பன்னிரண்டு. கனபாடிகள் வீட்டுக்குத் திரும்பி வரும்போதே களைப்பாக இருந்தார். கிட்டாவின் தோளை ஆதாரமாகப் பற்றிக் கொண்டே ஊஞ்சலில் போய் உட்கார்ந்தார். 'இறுக்கம் தாங்கலைடா, கிட்டா கொஞ்சம் விசிறி விடறயா?' என்று கேட்டவர் 'வடக்குப்பக்கம் பளிர் பளீர்னு 66616ು அடிக்கிறது, மழை வருமோ என்னவோ தெரியலை' எனறாா. “கொட்டு கொட்டுணு கொட்டப் போறது. பார்த்துண்டே இ ரு ங் க" என்றார் கிட்டப்பா. அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போதே பயங்கரமாய்க் காதே செவிடாகிவிடும் போல் இடித்த பேரிடி ஒன்று ஊரையே கிடுகிடுக்கச் செய்தது. 'அப்பா, இ க் த ப் பா ைல க் குடிச்சுட்டு போய்ப் படுத்துக்குங்க. இன்னைக்குப் பூரா பட்டினி நீங்க. ஏற்கனவே உடம்பு சரியில்லை உங்களுக்கு' என்று பரிவோடு அந்தப் பாலை அப்பாவிடம் தந்தாள் பாகீரதி. கனபாடிகள் அவளையே சற்றுநேர்ம் பார்த்துக் கொண் டிருந்தவர், சட்டென்று கண்களில் பணித்த ைேரத் துடைத்துக் கொண்டு "கிட்டாவுக்கும் கொடும்மா, பாவம் அவனுக்குத் தான் சிரமம். மத்தியானத்திலேந்து அலையறான்' என்றார். அர்ஜூனன் அலியா வரானே அப்பா, அந்த அலிக்கு என்ன பேரு சொன்னே?" என்று கேட்டாள் கமலா,

  • பிருஹன்னளை' என்றார்.

அந்த அலியை அவன்னு சொல்றதா, அவள்னு சொல் றதா?" என்று கேட்டாள் கமலா,

மகாபாரதத்துல எத்தனையோ சந்தேகங்களெல்லாம் இருக்கு, போயும் போயும் உனக்கு இப்படி ஒரு சந்தேகமா?' என்று கேட்டு மெலிதாகச் சிரித்தார் கனபாடிகள்.

கெளரி அத்தை கட்டிக் கற்பூரம் கொளுத்தி வந்து எல்லா ரையும் கனபாடிகள் பக்கத்தில் நிற்கச் சொல்லி திருஷ்டி கழித்துப் போட்டாள் 179

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/184&oldid=918766" இலிருந்து மீள்விக்கப்பட்டது