பக்கம்:வேத வித்து.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாஸ்திரத்தை மீறி கான் எடுத்திருக்கும் முடிவு மிகப் பெரிய பாவம் என்பது எனக்குத் தெரியும். இந்த பாவத் துக்குரிய தண்டனையை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கிறேன். வேதமும் சாஸ்திரமும் புனிதமானது. கிரந்தர மானது; மாற்ற முடியாதது. மாற்றக் கூடாதது. அதை மீறுகிற நான்தான் மகாபா பி. வேதமும் சாஸ்திரமும் என்னை மன்னிக்கட்டும். கெளரி எனக்குப் பிறகு பாகீரதியைக் காப்பாற் றும் பொறுப்பை உன்னிடத்தில் விட்டுச் செல்கிறேன். அவளுக்கும் மூர்த்திக்கும் மணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறாய் என்பதை நாள் ஒருவாறு ஊகித்து விட்டேன். உன் இஷ்டப்படியே செய். இதில் எனக்குப் பூரண சம்மதமே. இதனால் கிடைக்கக்கூடிய நல்ல பலன் எது வானாலும் அது உன்னைச் சேரட்டும். பாவத்தின் பலனை நானே ஏற்றுக்கொள்கிறேன். நீ எனக்காகக் கொண்டு வந்து கொடுத்த கங்கையை இப்போது என்மீது கொட்டு. அந்தப் புனிதநீர் என் பாவத்தைக் கழுவட்டும். உங்கள் எல்லோருக்கும் என் ஆசீர்வாதங்கள். இப்படிக்கு சங்கர கனபாடிகள். 'அண்ணா, கான் உனக்கு கங்கை சொம்பு கொண்டு வந்தது இதுக்குத்தானா?' என்று கேட்டு இதயமே வெடித்து விடுவது போல் கதறினாள் கெளரி அத்தை, ராத்திரி பெய்த மழையின் மிச்சமாக வீட்டுக் கூரைகளி லிருந்தும் மரம், செடி கொடிகளிலிருந்தும் சொட்டிக் கொண் டிருந்த துளிகள் கனபாடிகளுக்காக உலகமே அழுவது போல் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/187&oldid=918771" இலிருந்து மீள்விக்கப்பட்டது