பக்கம்:வேத வித்து.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* இ لقيت | பாடசாலைப் பிள்ளைகள் ஆசார சீலர்களாய், எதிர் எதிராக அமர்ந்து ஆவர்த்தம்' சொல்லிக் கொண்டிருந்தார்கள். பூஜை அறையிலிருந்து வந்த சாம்பிராணி வாசனையும் சமையலறையிலிருந்து வந்த ரசம் கொதிக்கும் வாசனையும் சங்கமமாகிப் பாடசாலைப் பிள்ளைகளின் மூக்கைத் துளைத்து பசியைக் கிளப்பிவிட்டது . 'அனுஷ்டானம் முடிப்பதற்குள் சமையலாயிடும். சீக்கிரமே இலை போட்டுருவா. துவாதசியாச்சே கொண்டி கிட்டா இருந்தா இத்தனை நேரம் வாழை ஏடுகள் சீவி, கூடம் பெருக்கி வைத்திருப்பான். மூர்த்தியானா இன்னும் தோட்டப்பக்கமே போகலை. அவனுக்கு என்ன ஆச்சோ தெரியலையே! கேட்டாலும் சொல்ல மறுக்கிறான்." - - - குண்டு பட்டாபி மனதை ஆவர்த்தத்தில் ஈடுபடுத்தாமல் சாப்பாட்டில் செலுத்தியிருந்தான். - "மூர்த்தி மணி எட்டாகப் போறது.டா! தோட்டப்பக்கம் இபாய் அந்தச் சருகிட்டுச் சுருங்கிப் போன வாழைமரத்தை வெட்டிண்டு வந்துடு, தண்டும் பட்டையும் உதவும்' என்றாள் பாகீரதி. . . ஆவர்த்தம் அனுஷ்டானமெல்லாம் எனக்கில்லையா?" என்றான் மூர்த்தி, ... . . . . . . .

18

18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/20&oldid=1281554" இலிருந்து மீள்விக்கப்பட்டது