பக்கம்:வேத வித்து.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:சொல்லுடா சங்கிலி எங்கே, சொல்லு, குளிக்கும்போது ஆற்றிலே போயிட்டுதா?' "ஆமாம்; நானே வெள்ளத்தில் மூழ்கிப் போனேன். நல்லவேளை கழைக்கூத்தாடிப் பெண் ஒருத்தி என்னைத் தூக்கிக் கரை சேர்த்தாள். அவள் இல்லையென்றால் இன்று நான் செத்துப் போயிருப்பேன். இரண்டு வாய் தண்ணீர் கூடக் குடித்து விட்டேன்...' "கழைக் கூத்தாடிப் பெண்ணா! அந்த நேரத்தில் அவள் எதுக்கு அங்கே வந்தாள்? சங்கிலியை அவள்தான் எடுத்துப் போயிருப்பாள்.' "அப்படியெல்லாம் பழி போடர் தே! அவள் ரொம்ப கல்ல பெண். உத்தமமானவள்...' "தெருத் தெருவா கூத்தாடி பிச்சை எடுக்கிற பெண் மீது உனக்கேன் இத்தனை கரிசனம்! அவளுக்கு ஏன் இத்தனை பரிந்து பேசறே? நானும் பார்க்கிறேன்; ஆற்றிலிருந்து வந்தது முதல் நீ சரியாவே இல்லே. ஏதோ பித்துப் பிடிச்ச மாதிரி ವ್ಹಿಚ್ಟೆ! அவள் ஏதாவது சொக்குப் பொடி போட்டு விட்டாளா, என்ன?' 'சி, சீ' என்றான் முர்த்தி. “எத்தனை வயசிருக்கும்டா அவளுக்கு?' "பதினாறு பதினேழுக்குள்ள்தான். உன் வயசுதான் இருக்கும். உன்னைப் போலவே ரொம்ப அழகா இருக்கா!' "சரிதான்; அவள் உன்னை மயக்கிட்டா போலிருக்கு? அப்பா கிட்டே சொல்வி கல்யாணம் பண்ணி வைக்கட்டுமா?" "அவர் ஊருக்குப் போற சமயத்திலே என் தயாவது சொல்லி அவர் கிம்மதியைக் கெடுத்துடள் தே! வேணாம்!' - பூஜை முடித்து, ஆகாரம் முடித்து கனபாடிகள் மடிசஞ்சி யுடன் காஞ்சீபுரம் புறப்படத் தயாரானபோது ஆற்றங்கரை பிள்ளையார் கோயில் அர்ச்சகர் "மூர்த்தி இருக்கானா?' என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார். ' -

21

21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/23&oldid=1281557" இலிருந்து மீள்விக்கப்பட்டது