பக்கம்:வேத வித்து.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும் பாவ காரியத்தில் சிக்கிக் கொள்வோமோ, குருத் துரோகியாகி விடுவோமோ என்ற அச்சத்தில் மூர்த்தியின் உடம்பெல்லாம் விதிர்த்து வியர்த்துக் கொட்ட, மார்பு படபட வென்று அடித்துக்கொள்ள, "ஸ்மிதமாதாயாக்னே ஸர்வவ்ரதோ பூயாஸ்-ஸ்வாஹா" "அக்கினி பகவானே! தினம் தினம் கான் செய்து வரும் சமிதாதானத்தால் எல்லா விரதங்களையும் நன்கு அனுஷ்டித் தவனாக ஆகும்படி அருள்வாயாக’ என்ற மந்திரத்தை மனதுக்குள்ளாகவே சொல்லி வேண்டிக் கொண்டான். “ஏண்டா, உன் உடம்பெல்லாம் இப்படி ஜூரம் வந்த மாதிரி நடுங்கறது? கண்ணெல்லாம் சிவந்திருக்கே தலைவலிக் கிறதா? சூடா காப்பி போட்டுக்கொண்டு வரட்டுமா? இப்பத்தான் பசும்பால் கறந்து வந்திருக்குடா குடிச்சுட்டு நாடாக் கட்டிலை இழுத்துப் போட்டுண்டு ஒரு ஆவர்த்தம் தூக்கம் போடு. சரியாப் போயிடும். காலையிலே ரெண்டு தரம் பச்சைத் தண்ணில ஸ்நானம் பண்ணயோல்லியோ, அதான் இப்படி' என்றாள் பாகீரதி. - 'இல்லை; நான் காப்பி சாப்பிடற வழக்கமில்லேன்னு உனக்கே தெரியுமே. தெருக் கோடி அரசமரம் வரைக்கும் போயிட்டு வந்துடறேன். சமித்தெல்லாம் தீர்ந்து போச்சு. இப்படி கொஞ்ச தூரம் காத்தாட் நடந்துட்டு வந்தாலே எல்லாம் சரியாப் போயிடும்' என்று வெளியே கிளம்ப அவசரப்பட்டான்.

26

26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/28&oldid=1281562" இலிருந்து மீள்விக்கப்பட்டது