பக்கம்:வேத வித்து.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விவரம் தெரிந்தவளாகிவிட்டேன். எல்லாம் புரிய ஆரம்பிச்சிருக்கு. மத்த பெண்களைப் போல் பொட்டு வைத்துக் கொள்ளணும், பூ வைத்துக் கொள்ளணும். வாழ்க்கையின் சுகங்களையெல்லாம் அனுபவிக்கணும்னு எனக்கு ஆசை இருக்காதா!' 'தப்பு, பாகீரதி தப்பு வைதிகக் குடும்பத்திலே பிறந்தவள் .ே அதுவும் இரண்டு யாகம் பண்ணினவர் உங்கப்பா. வேணாம். இந்த விபரீத ஆசைகளுக்கெல்லாம் உன் மனசிலே இடம் தராதே. பாபம், பாபம்' என்றான். "என்னடா பாபத்தைக் கண்டுட்டே? என்னமோ சாஸ்திரம் பேசறயே! இதெல்லாம் நம்மைச் சுற்றி காமாகப் போட்டுக் கொள்கிற கட்டுப்பாடுதானே? இப்படிப் பார்!" என்று அவன் முகத்தைத் தன் பக்கம் திருப்பி, சற்றும் எதிர்பாராத நிலையில் அவனைக் கட்டி அணைத்துக்கொண்டாள். அவன் விலக முயன்றான். "நெருங்கி வாடா! ஏண்டா, பயப்படறே? என்னைப் பாருடா கான் அழகாயில்லையா?" என்று அவனையே வெறிக்கப் பார்த்தாள். வேண்டாம் பாகீ எனக்கு பயமாயிருக்கு" மறுகாள் காலை. மூர்த்தி படுக்கையைவிட்டு எழுந்தது தான் தாமதம். ஒடிப்போய் கூடத்து ஆணியில் மாட்டியிருந்த பாம்புப் பஞ்சாங்கத்தை எடுத்துப் புரட்டி பல்லி விழுந்த பலன் என்னவென்று பார்த்தான். இடது புஜம்-ஸ்த்ரீ சம்போகம் என்ற வரிகளைக் கண்டபோது அவனை வெட்கம் பிடுங்கித் தின்றது. உடனே கனபாடிகள் நினைவு வர உடம்பெல்லாம் பதறியது. 'ஏன் மூர்த்தி, ஏன் ஒரு மாதிரி இருக்கே? கழுத்துச் சங்கிலி காணாமப் போயிட்டுதேன்னா? அதான் கிடைச்சுட்டுதே. அப்புறம் என்ன கவலை?' என்று கேட்டாள் பாகீரதி. 'கெட்டுப்போன கழுத்துச் சங்கிலி திரும்பக் கிடைச் கட்டுது. உண்மைதான். ஆனா கெட்டுப்போன என் பிரம்மசரியம் இனி திரும்பாதே' என்றான் மூர்த்தி.

31

31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/33&oldid=1281567" இலிருந்து மீள்விக்கப்பட்டது