பக்கம்:வேத வித்து.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'நீ ஆண் பிள்ளை. கானே கவலைப்படாதபோது இதில் உனக்கென்ன துக்கம்?" 'பரம வைதிகமான குடும்பத்தில் பிறந்தவள் நீ தர்க்க சாஸ்திரம் படிச்சவர் உங்கப்ப்ா. இர்ண்டு 'யர்கம் பண்ணவர். டபிள் சிரோமணி ஊருக்கு உபதேச்ம் பண்றவர். அந்த உத்தமருக்குப் பெண்ணாய்ப் பிறந்த நீ இப்படி நடந்துக்கலாமா? இந்த ரகசியம் கனபாடிகளுக்குத் த்ெரிஞ்ச் என்ன ஆகும் தெரியுமா? அவமானம் தாங்கிாமல் துர்க்குப் போட்டுண்டு பிராணனை விட்டுடுவார். அதை நினைக்கவே பயமாயிருக்கு. உடம்பெல்லாம் நடுங்கறது!" - 'அசட்டுப்பிசட்டுன்னு பேசாதே! யாரிடமாவது போய் உளறி வச்சுடாதே இந்தி ரகசியம் நம்ம ரெண்டு பேரோடு செத்துப் போகட்டும். சித்தியம் பண்ணிக்கொடு...' "சத்தியமும் வேணாம்; ஒண்ணும் வேணாம்...' விரக்தி யோடு புறப்பட்டான் மூர்த்தி. “சீக்கிரம் வந்துடு மூர்த்தி!' எதுக்கு இவ்வளவு பெரிய பையைத் தூக்கிண்டு போறே?" 'எல்லாம் துவைக்க வேண்டிய பாவ மூட்டை' 'ஜாக்கிரதை வழுக்கி விழுந்துடப் போறேl' 'அதான் ஏற்கனவே வழுக்கி விழுந்தாச்சே!' 'மூர்த்தி நீ குத்தலாப் பேசறே! ரெட்டை அர்த்தம் வெச்சுப் பேசறேl என்னை உனக்குப் பிடிக்கலேன்னா சொல்லிடு. கான் இந்த நிமிஷமே. தீயிலே விழுந்து செத்துப் போறேன். எனக்கு தோன் சகலமும். என் கழுத்திலே யார் தாலி கட்டினா? எப்ப அதை எடுத்தான்னு எனக்கு எதுவுமே தெரியாது.டா! பிராம்மண குலத்தில் பிறந்தது தப்பா? அதுக்கு இப்படி ஒரு தண்டனையா? நீயே என்னை வெறுத்தால் அப்புறம் சாவைத் தவிர எனக்கு வேற வழியில்லே." "நீ ஏற்கனவே கல்யாணம் ஆன பெண். கணவனை இழந்தவள். என்னைவிட வயதில் பெரியவள். நம் உறவு பொருந்தாத உறவு. வயசாலும் பொருந்தாது. சாஸ்திரத்துக்கும்

33

33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/35&oldid=1281569" இலிருந்து மீள்விக்கப்பட்டது