பக்கம்:வேத வித்து.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டி கிட்டா தெரிந்தான். 'இந்த நேரத்தில் இவன் எப்படி வந்து முளைத்தான்?" என்று வியந்தபடியே வாசலை நோக்கி விரைந்த பாகீரதி, "வாடா, தீபாவளிக்குப் போனவன் இப்பத்தான் வறயா? எங் கிருந்து வறே?' "நஞ்சாவூர்லேந்து. நடுவழியில் பஸ் மக்கர். அதான்..." "பின் கட்டுக்கு வா, கிறையப் பேசணும்...' - "கனபாடிகள் வந்தாச்சா?' ஒரு மரியாதையோடு ரகசியக் குரலில் கேட்டான் கிட்டா. . "உனக்கெப்படித் தெரியும் அவர் ஊரில் இல்லேன்னு...' "எப்படியோ...' என்றான். அவனிடமிருந்த கைப்பையை வெடுக்கென்று வாங்கிக் கொண்ட பாகீரதி, "என்னடா கொண்டு வந்திருக்கே?" என்று கேட்டாள். . 'பாருங்க...' பச்சை திராட்சையும் சமித்துகளும் இருந்தன. "ஏன் ஒரு மாதிரி இருக்கே, அக்கா?" உற்சாகமாத்தான்ே இருக்கேன். ஏன், உனக்கு அப்படித் தோண்றதோ?" "இல்லே: மூஞ்சி சொல்றதே!' கொஞ்சம் தயங்கியவள் இரலைத் தாழ்த்தி, மூர்த்தியைக் காணோம்டா, ரெண்டு நாளாச்சு, எனக்கு பயமாயிருக்குடா!' என்று சோகமாய்த் தழுதழுத்தாள். "தஞ்சாவூர்ல பார்த்தனே அவனை..." "பார்த்தயா! என்னடா சொன்னான்?" - இந்தப் பாடசாலைக்கு இனி வரப் போறதில்லையாம். வேகமும் படிக்கப் போறதில்லைiம்:

40

40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/42&oldid=1281576" இலிருந்து மீள்விக்கப்பட்டது