பக்கம்:வேத வித்து.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"அதோ அப்பா வந்துட்டாரே!' என்று ēᎦᏌᏝᏮytᎱ சொன்னதும் பாகீரதியின் வயிற்றில் தீக்குழம்பு கலங்கியது. மற்றவர்கள் மரியாதையாக எழுந்து கிற்க, கனபாடிகள் திண்ணையில் காலைத் தொங்கப் போட்டு அமர்ந்தார். "நீங்கள்ளாம் எங்கிருந்து வரேள்?' என்று காத்திருந்தவர் களைப் பார்த்து விசாரித்துக் கொண்டிருந்தபோது "தேள் கொட்டிட்டுது சாமி!' என்று அலறிக்கொண்டு ஓடி வந்தான் ஒருவன். "அதோ அந்தக் குட்டிச் சுவரிலிருந்து கொஞ்சம் மண்ணாங்கட்டி எடுத்துண்டு வா, போ' என்று கனபாடிகள் அவனையே ஏவ, அவன் ஓடிப் போய் சில மண்கட்டிகளைப் பிய்த்து வந்தான். "தேள் கொட்டின இடத்தைக் காட்டு' என்றார். அவன் வலது கையை நீட்டினான். மண்ணாங்கட்டியைச் சன்னமாகத் துரளாக்கி, கல்நீக்கி, மந்திரம் முணுமுணுத்து மூன்று முறை கொட்டின வாயில் வீசி ஊதினார். மூன்றாவது முறை விஷம் முழுவதுமாக இறங்கி கொட்டின வாய்க்கு வந்து எட்டிப் பார்த்தது. 'உன் பேர் என்னப்பா?' என்று கேட்டார் கனபாடிகள். "மண்ண சங்கட்டி!' 'உன் பேரும் மண்ணாங்கட்டியா!' சிரித்தார், மற்றவர் களோடு அவனும் சிரித்தான் . "வலி போயிட்டுதாரி' 'பறந்துட்டுது சாமி!' என்று சந்தோஷமாக அவர் காவில் விழுந்தான். சுற்றி நின்றவர்கள் கனபாடிகளின் மந்திர சக்தி கண்டு பிரமித்துப் போனார்கள். "ஆகாசத்திலிருந்து வரும் வேக ஒலிகளை மகரிஷிகள் கிரகித்து மனப்பாடம் செய்து, கடுமையான விரதங்களைக்

45

45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/47&oldid=1281581" இலிருந்து மீள்விக்கப்பட்டது