பக்கம்:வேத வித்து.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறாரே, அவர் திரும்பி வந்து 'என் மூர்த்தி எங்கே?' என்று கேட்டால் எப்படி பதில் சொல்வேன்?' என்று தவித்தார். ரா த்திரி, கூடத்து கடிகாரம் ஒன்பது அடித்து, ராப்பிச்சைக்காரர்கள் வந்துவிட்டுப் போன பிறகும்கூட கனபாடிகள் சாப்பிடாமல் மூர்த்தியை நினைத்து உருகிக் கொண்டிருந்தார். கமலா மெதுவாக அவர் அருகில் போய் நின்று "மனசைப் போட்டு அலட்டிக்காதீங்க. சாப்பிட வாங்கப்பா!' என்று அழைத்தாள். வேண்டாம்மா; எனக்குப் பசியே இல்லை' 'வெறும் வயிற்றோடு படுக்கக் கூடாது. மூர்த்தி உங்களுக்குப் பிடிக்கும்னு திராட்சைப் பழம் வாங்கி அனுப்பி யிருக்கான். இந்தாங்க, இதையாவது சாப்பிடுங்க' என்றாள் பாகீரதி. - "மூர்த்தியா! எனக்கா? அனுப்பியிருக்கானா!" கனபாடிகள் ஆவலோடு அதை வாங்கி வாயில் போட்டுக் கொண்டார். திராட்சை தேனாக இனித்தது. (அடாடா, இந்த மூர்த்திக்கு என் மீது எத்தனை அன்பு') 'கமலா! நான் படுக்கப் போறேன், காலெல்லாம் வலிக் கிறது. இன்றைக்கு ரொம்ப தூரம் கடந்தே வந்தேன். கிட்டாவைக் கூப்பிட்டு என் காலைக் கொஞ்சம் மிதிக்கச் சொல்லு. நான் இப்படியே இந்த மான்தோல் மீது படுத்துக் கொள்கிறேன்" என்றார். - கிட்டா வந்து அவர் கால்களை மிதிக்காமல் கைகளால் பிடித்துவிட்டான். 'காலால் மிதிடா, அப்பத்தான் வலி போகும். இல்லைன்னா என் கால் வலியெல்லாம் உன் கைக்கு ஏறிடும்' என்றார். "பரவாயில்லே; நான் பிடிச்சே விடறேன்' என்றான் கிட்டா. 'ஒகோ, உனக்கு ஒரு கால் ஊனமோ?...'

51

51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/53&oldid=1281587" இலிருந்து மீள்விக்கப்பட்டது