பக்கம்:வேத வித்து.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஏன் இப்படி அழlங்க? மூர்த்தியை நினைச்சுண்டா?" "ஆமாம்; அவனை ஒருநாள் ராத்திரி இப்படித்தான் காலை அமுக்கச் சொல்லிட்டுத் தூங்கிப் போயிட்டேன். விடியற்காலம் கண் விழித்துப் பார்க்கிறேன். அப்பவும் காலை அமுக்கிண்டே உட்கார்ந்திருந்தான். அப்படி ஒரு பக்தி அவனுக்கு. அவன் பிரிவை என்னால தாங்கிக்க முடியலை கிட்டா எனக்கு புத்திர பாக்கியம் இல்லை. ஆனாலும் புத்திர சோகம் என்பது எவ்வளவு கொடுமைன்னு புரியறது' என்றார். "மனசைப் போட்டு அலட்டிக்காதீங்க. த ன் ன ல வந்துடுவான், பாருங்க' என்றான் கிட்டா. "ஊஹல்ம்; எனக்குத் தோணல்லே! கார்த்தாலே முதல் வேலையா காம ரெண்டு பேரும் தஞ்சாவூர் புறப்பட்டுப் போகலாம். அங்கே போய் அவனைத் தேடிப் பிடிச்சு அழைச்சுண்டு வந்துடலாம். கிடைச்சுடுவானா?' என்று சின்னக் குழந்தை போலக் கண்ணிர் சிந்தியபடியே கேட்டார் கனபாடிகள். ሀ) தபால்காரர் கொண்டு வந்து கொடுத்த கடிதத்தை ஆவலோடு பிரித்துப் பார்த்தார் கன்பாடிகள். மூர்த்தி எழுதி யிருந்தான். -

றுநாள் காலை.

54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/56&oldid=1281590" இலிருந்து மீள்விக்கப்பட்டது