பக்கம்:வேத வித்து.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் யாரைத் தேடி, ஊரை விட்டு, பாடசாலையைவிட்டு வந்தானோ, யாருடைய அழகில் மயங்கினானோ, யாருடன் நிறையப் பேசி நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தானோ அந்த மஞ்சுவை அங்கே கண்டபோது உள்ளத்தில் ஒரு பரவச மான உணர்ச்சி பொங்கியது! மஞ்சு, மூங்கில் கழிகளை எடுத்து அவற்றின் நுனிப் பகுதியைப் பெருக்கல் குறிபோல் இறுகக்கட்டி தரையில் குத்திட்டுப் புதைத்தாள். பிறகு ஒரு நீளமான கம்பியால் அந்தப் பெருக்கல் குறிகளை இணைத்து அந்தக் கம்பிமீது ஏறி டமார லயத்துக்கு ஏற்ப "பாலன்ஸ்' செய்தபடி நடந்தாள். உயரத்திலிருந்து பார்த்த ம ஞ் சு வி ன் கண்களில் கூட்டத்தோடு நின்று கொண்டிருந்த முர்த்தி பளிச்சென்று தென்பட அடடே, இவன் எப்படி இங்கே வந்தான்!” என்று தனக்குள் வியந்தாள். அதேசமயம், முர்த்தியின் சட்டைப் ைப யி லி ரு ங் த மணிபர்ஸை யாரோ ஒருவன் ஜேப்படி செய்து கொண்டிருப்பதைக் கவனித்துவிட்ட மஞ்சு சட்டென்று கீழே குதித்து, கூட்டத்துக்குள் பாய்ந்து அந்த ஜேப்படி'யின் தலைமயிரைப் பிடித்துத் தரதர வென்று இழுத்து வந்து ஓங்கி ஓர் அறை கொடுத்தாள். "திருட்டுப் பயலே எடுடா அந்த மணிபர்ஸைl' என்றாள். அவன் திமிறிக்கொண்டு ஒடப் பார்த்தான். 'தப்பி ஒடப் பாக்கறயா? இது உடும்புப் பிடி. இதிலிருந்து நீ அவ்வளவு லேசாத் தப்பிட முடியாது' என்று அவனை ஒர் உலுக்கு உலுக்கினாள். அருகில் கின்ற போலீஸ்காரரை விறைப்பாகப் பார்த்து, "என்னய்யா தாணாக்காரரே! திருடனைக்கூடப் பிடிக்காம அங்கே யாரைப் பார்த்து இளிச்சிட்டு கிக்கறிங்க? இவனை ஸ்டேஷனுக்கு இழுத்துட்டுப் போய் காலு போடு போடுங்க. அப்பத்தான் புத்தி வரும் இவனுக்கு' என்றாள். இதற்குள் "ஐயோ, அது என் மணிபர்ஸ்' என்று அலறிக்கொண்டு ஓடி வந்தான் மூர்த்தி.

56

56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/58&oldid=1281592" இலிருந்து மீள்விக்கப்பட்டது