பக்கம்:வேத வித்து.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இச்சமயம் பாடசாலைப் பையன்களில் ஒருவன் கனபாடிகள் எதிரில் வந்து கின்றான். "என் கனடா?" "நேத்து நீங்க சொல்லிக் கொடுத்த வேத பாடத்தை ஸ்லேட்டில் எழுதிக்கொண்டு வந்திருக்கேன்,' என்றான். "வேதத்தை எழுத்தால் எழுதக் கூடாது.டா எழுதா மொழி ன்னு சொல்லுவா அதை. சப்த ரூபமான வேதத்தைக் காது வழியாக் கேட்டுதான் மனப்பாடம் செய்யனும். அப்படித் தான் அது வழிவழியா வந்திருக்கு. ஒரு அட்சரத்தின் சப்தம் கூடப் பிசகக்கூடாது. பிசகினால் அர்த்தம் அனர்த்தமாயிடும், வேதத்துக்கு ஸ்வரம் உண்டு. அதில் அபஸ்வரம் பேசக்கூடாது. உச்சரிப்பு, ஸ்வரம், ஆரோகணம் அவரோகணம் இதெல்லாம் எழுத்தாலே சாத்தியப்படுமா? நீ சின்னப் பையன். இதெல்லாம் உன்க்கு விளங்காது. போய் வேதத்தை ஒது எழுதாதே! தினமும் ஒரு ஆவிருத்தியாவது வேதத்தை வாய்விட்டுச் சொல்லு. வேதம் ஒதறபோது பாதில விட்டுட்டு அங்கே இங்கே எழுந்து ஒடக் கூடாது. போ, போ' என்றார் கனபாடிகள். "மூர்த்தி பாதில விட்டுட்டு ஓடிப் போயிட்டானே!" என்றான் அந்த அசட்டுப் பையன். அந்தப் பையனின் வெகுளித்தனமான கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை. "நீ போடா!' என்றார். {{ பாது ஏன் தலையை வாராமல் சிக்காக்கி வச்சிண் டிருக்கே? இப்படி வக்து உட்க்ாரு. தாழம்பூ என்றால் உனக்கு ரொம்பப் பிடிக்குமே! உனக்காகவே கல்ல வாசனைத் தாழம்பூவா வாங்கிண்டு வந்திருக்கேன். அழகாப் பின்னி விட்டுடறேன், வறயா?' என்றாள். - "ஐயோ, வேணாம் அத்தை அதுக்கெல்லாம் நான் கொடுத்து வைக்காத பாவியாயிட்டேன். இந்த உலகத்துல சிறுமைப்படவே இந்தப் பெண் ஜன்மம் எடுத்திருக்கேன். கேத்தே முடிவு பண்ணிட்டேன். இனி அப்பாவுக்கு என்னால எந்த

75

75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/77&oldid=1281611" இலிருந்து மீள்விக்கப்பட்டது