பக்கம்:வேத வித்து.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்த்தயா! சாபம் கொடுத்தயே, பலிச்சுட்டுது பார்" என்பதுபோல் கிட்டாவைப் பார்த்தார். 'கடிச்சது என்ன பாம்புன்னு தெரியுமா?' என்று அவர் களிடம் கேட்டார். 'நல்ல பாம்புதான். அதை அப்பவே அடிச்சுப் போட்டாச்சு!" என்றார் கூட்டத்தில் ஒருவர். 'த்சு, த்சு பாம்பைக் கொல்லவே கூடாது. மகாபாவம்' என்று சொல்லிக்கொண்டே தம் அங்கவஸ்திரத்தைச் சட்டென்று எடுத்து அதில் ஒரு பகுதியை நீளமாய்க் கிழித்து மந்திரம் ஜெபித்து ஒன்பது முடிச்சுகள் போட்டார் என்ன ஆச்சரியம்! அடுத்தகணமே கடுக்கன் கண் விழித்துப் பார்த்தார்! 'விஷம் இறங்கிடுத்து; இனிமே பயமில்லை; இவரை அழைச்சுண்டு போகலாம்' என்றார் கனபாடிகள். கண்களில் கண்ணிர் பெருக அந்தக் கடுக்கன் ஆசாமி கனபாடிகளைக் கையெடுத்துக் கும்பிட்டபடியே என்னை மன்னிச்சுடுங்க" என்றார். -

88

88

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/90&oldid=1281624" இலிருந்து மீள்விக்கப்பட்டது