பக்கம்:வேத வித்து.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதற்குள் அந்தப் பக்கம் வந்த கமலா, மறைவில் சுவர் ஒரமாகச் சாய்ந்து என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை ஒட்டுக் கேட்டாள். பிறகு அவர்கள் எதிரில் போய் கின்று என்ன, எனக்குத் தெரியாம இங்க என்ன பேச்சு?" என்றாள். "ஒண்ணும் பேசலையே கிட்டா தஞ்சாவூர் போறானாம். அப்பா உத்தரவு கொடுத்துட்டாராம். குதிக்கிறான்' "அதுக்கு கீ என்ன சொன்னே?" 'திரும்பி வறப்போ குடமிளகாயும் வறுத்த முந்திரியும் வாங்கிண்டுவான்னேன்...' - பொய்! வேற ஏதோ சொல்லிண்டிருந்தயே!' வேற ஒண்ணும் சொல்லலையே!' 'மூர்த்தி பேர் அடிபட்டுதே! எப்படியும் தேடிக் கண்டு பிடின்னு சொல்லிண்டிருந்தது காதில் விழுந்ததே!" "இந்தப் புதுக் கன்னுக்குட்டி மூர்த்தி எங்கேயோ ஒடிட்டுது. அதைத்தான் தேடிக் கண்டு பிடிடான்னு சொல்லிண் டிருந்தேன்' என்று சமாளித்தாள் பாகீரதி. கையில என்னடா அது?' என்று கிட்டாவைப் பார்த்துக் கேட்டாள் கமலா,

பட்டு வேட்டி. திருக்குறள் புத்தகம்."

ஏது?" 'மூ ர் த் தி வெச்சுட்டுப் போயிட்டான். தஞ்சாவூர்ல மூர்த்தியைப் பார்த்தா அவன் கிட்ட கொடுத்தடுன்னு பாகீரதி தான் எடுத்துக் கொடுத்தாள்" என்றான் கிட்டா. ஒரு அர்த்தபுஷ்டியோடு அப்படியா' எனும் பாவனையில் தலையை மேலும் கீழும் அசைத்தாள் கமலா.

95

95

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/97&oldid=1281631" இலிருந்து மீள்விக்கப்பட்டது