பக்கம்:வேத வித்து.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதத்தைப் பாதில விட்டுட்டு வந்த மாதிரி என்னையும் விட்டுட்டுப் போயிடுவியான்னு? நான் அன்னைக்கே கேட்டேன். நான் சந்தேகப்பட்ட மாதிரிதான் கடக்குது." 'சரி, இப்ப எனக்கு ரொம்பப் பசியாயிருக்கு, முதல்ல ஆனந்தா லாட்ஜ் வரைக்கும் போயிட்டு வந்துடறேன். அப்புறம் விவரமாப் பேசிக்கலாம்' என்றான் மூர்த்தி. 'நான் இன்னும் கொஞ்ச கேரத்துல வெளியே கிளம்பிடு வேன். அப்பாவை அழைச்சுட்டு வித்தை செய்யப் போறேன்.' க! எங்க?' 'சிவகங்கா கார்டன் பக்கத்துல இன்னைக்குப் புது மாதிரி வித்தை செய்யப் போறேன். இதுவரைக்கும் நீ பார்க்காத ஐட்டம்' 'நான் அங்கயே வந்து பார்த்துடறேன்!" என்று சொல்லிப் புறப்பட்டான் மூர்த்தி. காசு வெச்சிருக்கயா?" "என் அப்பா கொடுத்துட்டுப்போன காசெல்லாம் தீர்ந்து போச்சு. ஒரே ஒரு அரையணாத்தான் மிச்சம்' 'அஞ்சு ருபா தறேன், எடுத்துட்டுப்போ...!" ‘'வேணாம்; உனக்கு ஏற்கனவே நிறையக் கடன்பட் டிருக்கேன். நன்றிக்கடன்! எப்படித்தான் தீர்க்கப் போறனோ?' "அரையனால வயிறு ரொம்பிடுமா? ரெண்டே ரெண்டு இட்லிதானே கிடைக்கும். அது எப்படிப் பத்தும்? இந்தா காசு!" வேணாம்; கமுத்திலே எங்கம்மாவின் சங்கிலி இருக்கு. அதை வித்துடப் போறேன்...' 'அந்தப் பணமும் தீர்ந்து போச்சுன்னா அப்புறம் என்ன செய்வே?' "அது ஆண்டவன் கவலைl'

97

97

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/99&oldid=1281633" இலிருந்து மீள்விக்கப்பட்டது