களைக்கொண்டும் குறிப்பாக அந்த மொழியினைக் கற்போருக்கு மிகவும் பயன்படத்தக்கனவாகவும் உள்ள ஒரு கவிஞரின் படைப்புக்களைத் தான் தேடிக்கொண்டிருந்தபொழுது உண்மையிலேயே, அவர் வேமனரைக் காண நேர்ந்தது. இந்த வரம்புக்குள் அணுகினால், அவர் கருத்துப்படி கிரேக்கச் சில்லறைக் கவிஞர் லூவியன் என்பார்தான் வேமனருடன் மிகச்சரியாக ஒத்த ஒர் ஐரோப்பியக் கவிஞராக அமைகின்றார். பிரௌன் சொன்னர்: "கிரேக்க மொழிக்கு லூஷியன் எப்படியோ அப்படியே தெலுங்கு இலக்கியத்திற்கு இந்த நூலாசிரியர் ஆவார்; சிறந்த கவிதையென்றோ அல்லது சிறந்த இலக்கியம் என்றோ சொல்லமுடியாவிட்டாலும் இவர் முதன்முதலாகக் கல்வியைத் தொடங்குபவருக்கு மிகப்பழக்கப்பட்ட எழுத்தாளராக அமைகின்றார். இதிலிருந்து பிரௌன் வேமனரை முதல்வகுப்புப் பாடநூலுக்கு அப்பால் காணமுடியவில்லை என்பது தெளிவு.
இப்படி இருந்தபோதிலும் நாம் பிரௌன்மீது அன்பற்று இருக்கவேண்டியதில்லை. காரணம் என்னவென்றால், அவர்தான் முதன்முதலாக வேமனரின் கவிதைகளைச் சேகரித்து, ஒத்துப்பார்த்து ஒழுங்குப்படுத்திச் செவ்வைப்படுத்தி, அச்சிட்டு வெளியிட்டார். அக்கவிதைகளை ஆங்கிலத்திலும் இலத்தீன் மொழியிலும் முதன் முதலாக மொழி பெயர்த்தவரும் இவரே. தெலுங்கு இலக்கிய நிறுவனம் வேமனரை இனி என்றுமே புறக்கணிப்பதற்கு இயலாத முறையில் ஆற்றல்களைத் தன்னுடைய கவனத்தாலும் விடாமுயற்சியாலும், ஆர்வத்தாலும் தொடங்கி வைத்தவரும் இவரேயாகும். 'வேமனரின் கவிதைகள்: நீதி, சமயம், அங்கதம் பற்றியவை' என்ற தலைப்பில் தான் முதன்முயற்சியாக வெளியிட்ட நூலின் நூன்முகத்தில் தனக்கு நேரிட்ட சங்கடங்களையெல்லாம் கணக்கிட்டுக் கூறியுள்ளார். பொருத்தமான பகுதிகள் ஈண்டுத் தரப் பெறுகின்றன: