பக்கம்:வேமனர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீ அவர்களைக் கொல்லற்க. மாறாக நீ அவர்கட்கு ஒரு நன்மை செய்து அவர்களை விடுவிப்பாயாக". மனிதர்களைக் கொல்லுவதை விட பிராணிகளைக் கொல்லுவது குறைவான குற்றம் அன்று. பிராணியொன்றின் உயிர் மதிப்புக் குறைவு என்று ஏன் கருதுகின்றாய்? உண்மையில் அது ஒரு மடையனை விடக் கேடானதா? நீ கொல்ல வேண்டிய ஒரே ஒரு பிராணி உன்னுள் உறையும் பிராணியேயாகும். உணர்வுள்ள எல்லாப் பிராணிகளிடமும் அன்பு காட்டி அறிவுடைமையுடன் வாழ்ந்து பெருமையுடன் கிழப் பருவத்தை எய்துக. கிழப்பருவத்தை அடைவதென்பது மனத் தளர்ச்சியடைவதென்பது அன்று; அஃது அறிவுக்கூர்மையை எட்டுவதாகும். எனினும், அறிவாழம் என்பது வயதின் தனி உரிமைக் குத்தகை என்று கருதற்க. சில இளைஞர்களும் நீ செல்லும் வழியில் ஒளி காட்டுவதற்கேற்ற அறிவுடைமையுடன் இருத்தல் கூடும். "இளையோர் ஒருவர் பிடித்துள்ளதால் கைவிளக்கின் ஒளி குறைவாகி விடுமா?" புல்லைத் தின்னும் பிராணி பழங்களின் இன்சுவையை அறிய முடியாது என்பதை நினைவில் இருத்துக: அங்ஙனமே சிறு கலைகளில் தனிப் பயிற்சி பெறுவோர் வாழ்க்கையின் பெருங்கலையைப் பாராட்டியுரைக்க முடியாது. உண்மையில், வாழ்க்கைக் கலை என்பது கலைகளனைத்திலும் மிகமிக உயர்ந்த தாகும்.

வேமனரின் ஒரு குருட்டு இடம் (களங்கம்) பெண்ணைப்பற்றியது; ஆகவே அவர் தன்னுடைய நன்னோக்க வாழ்வின் திட்டத்தில் ஒரு தாழ்வான, கிட்டத்தட்ட பழிக்குரிய, இடத்தை நல்குகின்றார். அவர் கருத்துப்படி பெண்ணே எல்லாவிதக் கேட்டிற்கும் பிறப்பிடமாவாள். அவள்தான் சர்ஸி[1], அவள்தான் டெவிலா[2]; மனிதனுடைய வீழ்ச்சிக்கெல்லாம் அவளே காரணம். அவளிடமிருந்து ஒதுங்கியிருப்பதே மிகச்சிறந்தது: உங்களால் அதனைச் செய்யமுடியாதுபோயின், அவளேக் கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்கவேண்டும். அவளை வீட்டுக்குள்ளேயே ஒதுக்கி வைக்கவேண்டும்; இயன்ற வழிகளிலெல்லாம் அடக்கி வைக்கவேண்டும். ஒரு பெண்ணின் உண்மையிலும் மெய்யன்பிலும் நம்பிக்கை வைப்பது அறிவின்மையாகும்; "கடலில் கப்பலின் அடிச்சுவடுபோலவும், விண்வெளியில் பறவை செல்லும் வழிபோலவும், பெண்ணின்


  1. சர்ஸி: இவள் ஒரு மந்திரக்காரி; மனிதர்களை மிருகங்களாக மாற்றியவள். ஹோமரின் பெருங்காப்பியமான 'ஒடிஸ்ஸியில்’ விவரங்காண்க.
  2. டெலிலா சாம்ஸனின் என்ற மாவீரனை மயக்கிய மாது. விவரம் விவிலியம்-பழைய ஏற்பாட்டில் காண்க.

73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேமனர்.pdf/80&oldid=1252126" இலிருந்து மீள்விக்கப்பட்டது