பக்கம்:வேலின் வெற்றி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 வேலின் வெற்றி சேனைகளை அவ்விடத்தில் நிறுத்திச் சிறைப்பட்ட வானவரை இட்டுக்கொண்டு சூரன் முன்னே சென்று, முறையாக வணக்கம் செய்தான் பின்பு எழுந்து நின்று, "ஐயனே அயிராணியைக் காணவில்லை; இந்திரனையும் காணவில்லை; வானுலகத்தில் உள்ள தேவரையும் சயந்தனையும் பிறரையும் கொண்டுவந்தேன். அந் நாட்டைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டேன்" என்று கூறினான். அப்போது அங்கு நின்ற வானவரைக் கண்டான், சூரன், சீற்றங் கொண்டான் "இருள் சூழ்ந்த நரகம் போன்ற பெருஞ் சிறையில் இவரை அடைத்திடுமின்" என்று அசுரரை நோக்கிக் கூறினான். அவர்கள் தேவரையும் சயந்தனையும் பிடர் பிடித்துத் தள்ளிச் சிறைக்கோட்டத்திற் சேர்த்தார்கள். சயந்தனும் வானவரும் சூரன் நகரிலே சிறையிருந்தார்கள். திருமால் முதலிய தேவராலும் வெல்லுதற்கரிய வீரனாகி, , , வானவரை வெஞ் சிறையில் இட்ட அரசர் முருகவேள், கோமானாகிய சூரனது உயிரை வாங்கும் விவாகுவைத் வண்ணம் பரஞ்சுடர் உருவாகி வந்த வடிவேல் சீ' முருகன், தன் அருகே இருந்த இந்திரன் ஆகிய தேவர்களை நோக்கி, "நாம் அசுரர் குலத்தை அழித்திட நாளையே போவோம்; அதற்கு முன்னர் ஒரு துதனை விடுத்துக் கொடிய சூரனது கருத்தினை அறிதல் வேண்டும்" என்று அருளினார். சிவகுமாரன் இவ்வாறு செப்பியபோது, "ஐயனே! குரனுடன் வீரப்போர் தொடங்கு முன்னே ஆற்றல் சான்ற துரதன் ஒருவனை அனுப்புதலே அறநெறியாகும்" என்று மலரவனும் மாயவனும் கூறினர். - அது கேட்ட முருகன் கருணை கூர்ந்து, அருகே நின்ற வீரவாகுவை நோக்கி, "வீரனே! நீ மகேந்திர நகர்க்கு விரைந்து சென்று இந்திரஞாலத் தேருடைய சூரனைக் கண்டு, இந்திரன் மைந்தனையும் வானவரையும் அவன் இன்றே சிறையினின்று விடுவித்தல் வேண்டும் என்றும், அறநெறி தவறாமல் அரசாளுதல் வேண்டும் என்றும் அறிவித்திடுக. அசுரர்கோன் அதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/100&oldid=919612" இலிருந்து மீள்விக்கப்பட்டது