பக்கம்:வேலின் வெற்றி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$25 வேலின் வெற்றி அவள் அருளைப் பெறக் கருதிக் கை தொழுது, "என் தந்தையை ஈன்ற தாயே! முருக துதனோடு நான் போர் செய்தேன்; மான்ம் இழந்தேன்; வன்மையும் கெட்டேன். நேற்றுப் போர்புரிந்து என்னை வென்ற அப் பகைவனை இன்று நான் வென்றிடல் வேண்டும். அதற்கு ஏற்ற படைக்கலம் தருவாயாக" என்று வேண்டினான். பானுகோபன், அசுரன் சென்ன சொற்களைக் கேட்டாள், மாயை, ஒப்பற்ற மாயப்படை யொன்றை உண்டாக்கி, அவன் கையிற் கொடுத்து. "மைந்த இப் படையை மறைந்து நின்று மாற்ற்ார்மீது ஏவுக. இது முருக துதனையும் மற்றையோரையும் வளைத்து அவர் அறிவை மயக்கிவிடும்; காற்றின் தொழிலையும் செய்யும். இதனால் இன்று வெற்றி உனதே செல்க" எனப் பணித்தாள். மாயை மறைந்த பின்னர்ப் பானுகோபன், கனற்படை காற்றுப்படை, கூற்றுப்படை மதிப்படை, மாற்படை, கதிர்ப்படை அரன் படை அயன் படை முதலியவற்றை எடுத்தான் அப் படைக்கலங்களோடு அசுரசேனை சூழ்ந்து வர, மகேந்திர மாநகரை விட்டு, அழகிய மதிலைக் கடந்து சென்றான். இதை யறிந்த முருகவேள் வீரவாகுவை நோக்கி, "நேற்றுத் தோற்று ஓடிய சூரன் மகன் இன்று உன்னைக் கருதித் திண்மையோடு வந்துள்ளான். நீ படைத்தலைவர்களோடு நேற்றுப் போலவே சென்று மாற்றானை எதிர்த்துப் போர் புரிந்திடு; அவன் ஏவும் படைகளுக்கு எதிரர்க வுள்ள படைக்கலங்களை விடுத்திடு; அவ் வஞ்சகன் மாயம் புரிவானாயின் நமது வேல் விரைந்து வந்து அவன் மாயையை அழிக்கும். இப்பொழுதே சென்றிடு” என்றார். அப்பணி தலைமேற் கொண்ட வீரவாகு, அவர் பாதம் பணிந்து விடை பெற்றுப் புறப்பட்டார். கோடி கோடியான இடிகள் ஒன்றாகி மின்னலின் இடையே மறைந்து ஒலித்தாற் போன்று, வான் அளாவிய தோள்களையுடைய வீரவாகு, பகைவர் நடுங்கும்படி.வில்லினின்றும் நாணொலி எழுப் பினார். அது கண்ட பானுகோபன், நான் அன்று போர்க்களத் தினின்று மறைந்து ஓடினேன் என்னும் வசை எங்கும் பரவிற்று. இன்றும் தப்பியோடுவேனாயின் எல்லோரும் என்னை இகழ்வர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/134&oldid=919685" இலிருந்து மீள்விக்கப்பட்டது