பக்கம்:வேலின் வெற்றி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 வேலின் வெற்றி வீரமகேந்திர நகரை விரைவில் அழித்திடுக” எனப் பணித்தார். அவ்வாறே செய்து முடித்தான், வருணன். திருமால், பிரமன் முதலிய தேவர்களும், வானவர் கோனும் போற்ற, மற்றைய வீரர்கள் மருங்கே வர, பூதகணங்கள் புடை சூழ போர்க்களத்தை விட்டுப் புறப்பட்டார். முருகவேள். கருங்கடலால் விழுங்கப்பட்ட மகேந்திர நகரின் எல்லை கடந்து, இலங்கை மாநகரையும் கடந்து, செம்மை வாய்ந்த செந்தி மாநகரை யடைந்து முருகப்பெருமான் மயில் வாகனத்தைவிட்டு இறங்கினார். அப் போது அறுமுகக் கடவுளைப் பிரமன் முதலிய தேவர்கள் தலையால் வணங்கி, "அடியவர்களாகிய நாங்கள் நின் பொன்னடி போற்றி அர்ச்சனை புரிய ஆசைப்படுகின்றோம்" என்று வேண்டினர். அறுமுகப் பெருமான் அதற்கு இசைந்தருளினார். வானவர் சிறப்பாக வழிபாடு செய்தனர், முருகன் திருவடியைத் தம் முடியிற் சூடினர்; வணங்கி வாழ்த்தினர். அன்னார் அன்புடன் செய்த வழி பாட்டை ஏற்று மகிழ்ந்த குமரேசன் பெருங்கருணை பாலித்தார். அரந்தை கெடுத்து அருள்புரிந்த முருகனுக்குக் கையுறை இத்திரன் அளிக்க விரும்பினான், அமரர் கோமான். கொடும்ை సత్ర ; செய்த பகைவரை வென்று, விண்ணுலக ஆட்சியை மீட்டுக் கொடுத்த வெற்றிவேல் வீரனுக்கு, அழகிய கூந்தலையுடைய தன் மகள் தெய்வயானையை மணஞ் செய்து கொடுக்க எண்ணினான் அக் கோமான் அக் கருத்தை மனத்திற் கொண்டு ஒரு தூதுவனை அழைத்தான் அவனை நோக்கி, "நீ இப்பொழுதே மேரு மலைக்குச் செல்க, அங்குள்ள என் தேவியையும், புதல்வியையும் இன்றே அழைத்து வருக" என்றான். உடனே தூதுவன் எழுந்தான் மேருமலைக்குச் சென்றான். இந்திராணியின் முன்னின்று வணங்கினான். "உன் விருப்பம்போல் எல்லாம் நடந்தது; கொடிய சூரன் மாண்டான்; உன் மைந்தனும் தேவரும் சிறையினின்றும் மீண்டார். சேவற் கொடியோனாகிய செவ்வேள், வாகை சூடிய சேனையோடு இப்போது திருப்பரங் குன்றத்தில் அமர்ந்துள்ளார். வானவர்கோன் அக் குன்றத்திற்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/168&oldid=919759" இலிருந்து மீள்விக்கப்பட்டது