பக்கம்:வேலின் வெற்றி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை 43 அகத்துள் எண்ணினான்; மீண்டும் வீரம் மேலிட்டு, இனிப் பரமசிவன் அளித்த பாசுபதாஸ்திரத்தை விடுவோம் என்று எண்ணி, அதனை எடுத்து, மனத்தினால் அருச்சனை புரிந்து, சீற்றத்தோடு விடுத்தான். - அது கண்ட கந்தவேள், தந்தையை மனத்தில் நினைத்துச் செங்கரத்தினை நீட்டி அக் கொடிய அஸ்திரத்தைக் கொடுத்தவன் வாங்கிய தன்மைபோல் கருணையோடு பற்றிக்கொண்டார். பற்றிய படைக்கலத்தைத் தம்முடைய ஆயுதங்களோடு சேர்த்த முருகன் செயல் கண்டு, இனி நமது ஆக்கம் எல்லாம் அழிந்தது என்று ஏக்கம் கொண்ட தாரகன், பரமசிவனது பாசுபதப் படையை விட்டேன். அதனையும் எதிர்த்துப் பற்றினான். இவ் வறுமுக முதல்வனது ஆற்றலை, ஒருவர் நாவினால் உரைக்க ஒண்னுமோ? ஆயினும், சிவனார் திருமகன் அறப்போர் புரிவானே யன்றி மாயப்போர் புரிய நினையான். ஆதலால், மறைந்து நின்று நான் மாயம் புரிவேன்' என்று மனத்தால் எண்ணினான். அப்படியே கிரவுஞ்ச மலையுடன் கலந்து, அளவிறந்த மாயா •. வடிவங்களைக் கொண்டான், தாரகன். எங்கும் நிறைந்து நின்றான். முருகப்பெருமான் இதனைக் - கண்டு, அவனுயிரை அழிக்கத் திருவுளம் கொண்டு, தம் திருக்கையில் அமைந்த வேலாயுதத்தை நோக்கி, "தாரகன் என்னும் பெயருடைய அசுரனையும், சஞ்சலம் விளைக்கும் கிரவுஞ்ச மலையையும், ஒரு நொடிப் பொழுதி னுள்ளே பிளந்து, உயிருண்டு, புறத்தே போந்து, பூதர்களையும் நூறாயிரத்தொன்பது வீரரையும் மீட்டு இங்கு வருக" என்று கூறி விட்டார். அவ் வேல், ஊழிக்காலத்தில் எல்லாவற்றையும் சுட்டெரிக்கும் கனல் போல் எழுந்து, மலையோடு சேர்ந்து தாரகன் இயற்றிய மாயைகளையெல்லாம் அழித்து ஒழித்தது; மேலும், தாரகன் மார்பென்னும் பெரிய மலையைப் பிளந்து, - கிரவுஞ்ச கிரியைத் தாக்கி ஊடுருவிச் சென்று வீரமும் புகழும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/51&oldid=919860" இலிருந்து மீள்விக்கப்பட்டது