பக்கம்:வேலின் வெற்றி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்போது சூரனுக்கு ஊழியம் செய்து உலைவுற்ற தேவர் சிலர், "இச் சிறுமை எம்மை விட்டு என்று நீங்குமோ? என்று ஏங்கி, விண்ணுலகை விட்டு மண்ணுலகம் போந்தனர்; தெள்ளிய தமிழ் மொழியின் இருப்பிடமாகிய தென்னாட்டை அடைந்து புகழமைந்த சீகாழிப் பூங்காவனத்தை நண்ணி, இந்திரனைக் கண்டனர்; அன்று மலர்ந்த செந்தாமரை போன்ற அவன் அடிகளில் விழுந்து எழுந்து போற்றிப் பின் பேசலுற்றார்: "ஐயனே! நீல கண்டனிடம் வரம் பெற்ற சூரனுக்குச் செய்யத் தகாத வேலை யெல்லாம் செய்தோம்; நெறி இழந்தோம். நிலை யிழந்தோம்; மானமும் இழந்தோம்; அல்லற்பட்டு அலுத்தோம்; தொல்லை யுற்றுத் துயருழந்தோம்" என்று பலவாறாக முறையிட்டு வருந்தினார்கள். அது கேட்ட இந்திரன் அன்னார் மனத்திலமைந்த அருந் துயரைக் கண்டான் நெடுஞ்சிந்தனையில் ஆழ்ந் வானவர் தான்; அயர்ந்தான். பெருமூச்செறிந்து, "அல்லல் இந்திரனிடம் விளைக்கும் அசுரர் பணியால் நாம் எல்லோரும் முறையிடுதல் பெருமை இழந்து சிறுமையுற்றோம். இனி வெள்ளி மாமலையை அடைந்து, இறைவனிடம் முறை யிட்டு நம் துயரத்தைத் தொலைப்போம்" என்று கூறி, இந்திரன் எழுந்து, வானவரை நோக்கி, "சிறிது நேரம் இங்கே இருங்கள் எனப் பணித்துச் சித்திரப் பாவை போன்ற இந்திராணி இருந்த இடம் போந்தான். “மாதே! வானவரெல்லாம் மனம் நொந்து துன்பத்தால் துடிக்கின்றார்கள் அன்னவரை அழைத்துக்கொண்டு நம் குறைகளை முறையிடுவதற்காக, மதுரமொழி பேசும் மங்கை பங்கனாகிய இறைவன் வீற்றிருக்கும் இமயமலைக்குப் போகின்றேன். இச்செய்தியைச் சொல்ல வந்தேன்” என்றான். அம் மொழி கேட்ட அயிராணி மயங்கி விழுந்தாள். "அந்தோ! இன்னுயிர்த் தலைவா! பொன்னாட்டை விட்டும், இப் புனித வனத்திருந்தும். உன் அருளே தஞ்சமாக இன்றளவும் வாழ்ந் திருந்தேன். என்னை நீ பிரிந்தால் பின்னை யாரே துணையாவர்? பேதையேன் பிழைக்குமாறுண்டோ? உன் அன்புடைய மகனும் இங்கில்லை. வானவரும் இல்லை. வெள்ளை யானையும் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/90&oldid=919946" இலிருந்து மீள்விக்கப்பட்டது