பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 47 ஊரைப் பற்றியோ உலகத்தைப் பற்றியோ தெரிந்து கொள்வதில்லை; பகுத்தறிவாளர்களின் புத்தகங்களையோ பத்திரிகைகளையோ படிப்பதில்லை இன்னும் சொல்லப்போனால் அண்டை வீட்டுக் காரனைக்கூட இவர்கள் கவனிப்பதில்லை. தான் உண்டு, தன் வீடு உண்டு; தன் மனைவி மக்கள் உண்டு! - அவ்வளவுதான்! இத்தகைய மனோநிலையில் வாழ்ந்து வருவதால் தான் இந்நாட்டு மக்களுக்குச் சிலர் பெருமையுடன் செல்லிக்கொள்வதுபோல் குலவித்தை கல்லாமலே வந்து விடுகிறது ! ரயில்வே தொழிலாளியின் மகன் ரயில்வே தொழிலாளியாகவே வருகிறான்; பஞ்சாலைத் தொழிலாளியின் மகன் பஞ்சாலைத் தொழிலாளியாகவே வருகிறான்; பஸ் டிரைவரின் மகன் பஸ் டிரைவராகவே வருகிறான்; பாக்டரி தொழிலாளியின் மகன் பாக்டரி தொழிலாளியாகவே வருகிறான்! பெரும்பாலும் நம் சமூகத்தில் இப்படித்தான் நடக்கிறது. இன்னும் நடந்து வருகிறது.