பக்கம்:வேளிர் வரலாறு.djvu/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளிர் வரலாறு. புராதன நாடு யாது? இவர் வந்தேறிய காலமும் வரலாறும் என்னை? என்பன முதலிய செய்திகளை விசாரிப்போம். வேளிர் வரலாற்றைப்பற்றித் தமிழ்நாட்டில் வழங்கிவந்த பழைய செய்திகள் சிலவற்றை, ஆசிரியர்- நச்சினார்க்கினியர் தொல்காப்பியப் பாயிரவுரையில், அடியில் வருமாறு குறிப்பிடுகின்றார்:-"தேவரெல் லாங்கூடி 'யாம் சேரவிருத்தலின் மேருத் தாழ்ந்து தென்றிசை உயர்ந் தது; இதற்கு அகத்தியனாரே ஆண்டிருத்தற்குரியர்' என்று அவரை வேண்டிக்கொள்ள, அவரும் தென்றிசைக்கட் போதுகின்றவர் ....... துவராபதிப்போந்து, நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும், பதினெண்குடி * வேளிர் உள்ளிட்டோரையும், அருவாளரையுங் கொண்டுபோந்து காடுகெடுத்து நாடாக்கி........... பொதியிலின்கணிருந்தனர்”+ -எனக்காண்க. இவ்வரலாற்றுள், துவ ராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண்” எனத் துவராபதிக்கும் திருமாலுக்கும் சம்பந்தம் கூறப்படுதலால், அத்தொடர், துவாரகையைப் புதிதாக நிருமித் தாட்சிபுரிந்த கண்ண பிரானைப்பற்றியதென்பது எளிதிற் புலப்படத்தக்கது. இனி, மேற் கூறப்பட்ட செய்திகளுள், 'அகத்தியமுனிவர் துவாரகை சென்று

  • 'பதினெண்கோடி' என அச்சுப்பதிப்பில் உள்ள தாயினும், ஏட்டுப்பிரதி

களில் அவ்வாறின்மையாலும், பொருளதிகாரம், கூஉ-ம் சூத்திரவுரையிலும் 'பதினெண்குடி' என்றே ஆளப்படுதலாலும் 'குடி' என்பதே பொருத்தமாம். " இவ்வாறு எழுதிச்செல்லும் நச்சினார்க்கினியர்-"இராவணனைக் கந்தரு வத்தாற் பிணித்து அவனை ஆண்டு வாறாமை விலக்கி என்ற செய்தியையும் உடன் கூறுகின்றார். இச்செய்தி, மதுரைக்காஞ்சியுரையிலும் அவ்வுரைகார ராற் குறிக்கப்பட்டுள்ளது. இவ்விராவணன் இராமபிரானோடு பொருது வீழ்ந்த வனாயின், கண்ணபிரான் காலத்துக்குப் பின்னிகழ்ந்த செய்தியுடன் இராவணன் விஷயம் கூறப்படுதற்குக் காரணம் புலப்படவில்லை. ஒருகால், இவ்விராவணன் தென்றிசையாண்ட வேறொருவனெனிற் பொருந்தும். + துவாரகை.

  • நிலங்கடந்த நெடுமுடியண்ணல் - உல. மளத்தற்குத் திருவிக்ரமாவதாரம்

எடுத்த திருமால். தொல் - பாயிரவுரையில் மற்றோரிடத்தும் "நிலங்கடந்த நெடுமுடியண்ணலை நோக்கி உலகந்தவஞ்செய்து வீடுபெற்றமலையாதலானும், வேங்கடத்தை எல்லையாகக் கூறினார் என இத்தொடரையே நச்சினார்க்கினியர் திருமாலுக்கு வழங்குதல் காண்க. "நீணிலங் கடந்த நெடுமுடி யண்ணல்-தா டொழு தகையேன் என்றார் இளங்கோவடிகளும். (சிலப். கக-ம் காதை-கசக்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/19&oldid=990583" இலிருந்து மீள்விக்கப்பட்டது