பக்கம்:வேளிர் வரலாறு.djvu/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளிர் வரலாறு. மென்று தெரிகிறது. ஆனால், அவ்வுரைகாரர் தாமெழுதியவற்றுக் குக் காரணமாயிருந்த மேற்கோளை எடுத்துக்காட்டினாரில்லை. இச் செய்திகளைப் பிரமாணத்தாலன்றிப் பிற்காலத்தவரொருவர் கூற்றால் மட்டும் நம்பி மேற்செல்லுதல், சரித்திரவுண்மை யறிவதற்குப் போதாததாம். மேலும், துவாரகையாண்ட கண்ணன்வழியினர் இவ் வேளிரெனின், அது புதிய செய்தியன்றோ . ஆதலால், நச்சினார்க் கினியர் எழுதியவற்றை அடியாகக்கொண்டு, அவற்றி னுண்மையை விளக்கவல்ல வேறு சாதனங்கள் உளவா என்பதை இனி, ஆராய்ச்சி செய்வோம். நச்சினார்க்கினியர் எழுத்தின்படி, வேளிரென்பவர் கண்ணன் வழியினராயின், அவரை நாம் யாதவர் என்றே அழைக்கலாம்: என் னெனின்- அப்பெருமான் அவதரித்தது யதுவமிசத்திலென்பது* பிரசித்தமன்றோ. இனி, இவ்வேளிர் துவாரகையினின்று தென்னாடு புகுந்த பழைய யாதவராயின், அன்னோர் வரலாறு பண்டைத் தமிழ் நூல்களிற்குறிக்கப்பட்டிருத்தல் வேண்டும். ஆனால், இவர்கள் கண்ணன் காலத்தை அடுத்துத் தெற்கே வந்தேறியவராக நச்சினார்க்கினியர் கூறுதலின், அவர்கள் செய்தியை நன்கு விளக்கக்கூடிய அக்காலத்து நூல்கள் இறந்தனபோலும்; எனினும், பிற்பட்ட. கடைச்சங்கச்செய் யுளில், இவ்வேளிர் வரலாற்றைக் குறிப்பிக்கக் கூடிய இரண்டொரு செய்திகளும் இல்லாமற்போகவில்லை. கடைச்சங்கத்தவராகிய கபி லர் என்ற புலவர் பெருமான் இருங்கோவேள் என்ற சிற்றரசனை நே ரில் அழைக்குமிடத்தில்:-

  • "யது என்பான், பாண்டவரின் மூதாதைகளில் ஒருவனாகிய யயாதிக்குத்

தேவயானை வயிற்றில் உதித்த புத்திரன். இவன் வம்சம் பல்கிப் பலகிளைகளாகி அநேக பிரசித்திபெற்ற ராஜர்களைத் தந்தது. யதுவின் மூத்தகுமாரனாகிய ஸகஸ்ரஜித்தினாலே ஹேஹபவமிசமாயிற்று. அவ்வம்சத்திலே கார்த்தவீர்யார்ச் சுனன் என்ற பிரசித்திபெற்ற அரசன் தோன்றினான். அவன் சந்ததியிலே தாளஜங்கர்கள் தோன்றிவிளங்கினர். யதுவின் இரண்டாம் புத்திரனாகிய குரோ ஷ்ஷே வம்சத்திலே பிரசித்திபெற்றவர்கள்-சசிபிந்து, சியாமகன், விதர்ப்பன் என்பவர்கள். இவருள் விதர்ப்பனால் விதர்ப்பராஜவம்சம் வந்தது. விதர்ப்பன் மூன்றாம் புத்திரனாலே சேதிவமிசம் வந்தது. இரண்டாம் புத்திரன் வமிசத்த வனாகிய சாத் வதனால் போஜவமிசமும், அந்தநவமி.சமும், விருஷ்ணிகள் மிசமும் வந்தன. இவற்றுள், விருஷ்ணிக வமிசத் திலேதான் கண்ணபிரான் அவதரித் தது.- அபிதானகோசம், யது என்ற தலைப்பின் கீழ்க் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/21&oldid=990581" இலிருந்து மீள்விக்கப்பட்டது