உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வேளிர் வரலாறு.djvu/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளிர் வரலாறு. கலகத்தாற் போர்புரிந்து மாண்டனரென்பதும், அக்காலத்துப் பலர் அவ்விடத்தைவிட்டு வெளியேறினர் என்பதும், அங்ஙனம் வெளியே றியவர் கோதாவரியின் தென்கரைப் பக்கங்களிலும் பரவலாயினர் என் பதும் இதிகாசங்களால் அறியப்படுகின்றன. இச் செய்திகளால், யாதவ குலத்தார்க்குப் பலதேசங்களிலும் அடுத்தடுத்துக் குடியே றும்படி நேர்ந்துவந்ததென்றும், அம்முறையில், அன்னோர் முதலிற் கங்கைபாயும் நாடுகளினின்று மேல்கடலோரங் குடியேறிக் காலாந் தரத்தில் மஹாராஷ்டிரமெனவழங்கும் தேசமுழுதும் பரவியிருந்தன ரென்றும் விளங்கலாம் இவ்வாறாயின், அவ்யாதவர்கள் தாம் பரவி யிருந்த நாட்டுக்குத் தெற்கணிருந்த தமிழகத்துக் காடுகளைத் திருத்தி, ஆண்டும் குடியேறினர் என்று கொள்வதில் புதுமை யொன்றுமில்லை என்க. யாதவர் தெற்கே வந்ததைப்பற்றிய நச்சினார்க் கினியர் எழுத்துக்களை முழுதும் ஆதரிக்கக்கூடிய பிரமாணம் இப் போது கிடைப்பதரிதேனும், அவற்றைக் குறிப்பிக்கக்கூடிய பிரமா ணமும் இல்லாமற்போகவில்லை என்பதை இதனால் அறியலாம். யாத வர் தென்னாட்டுங் குடியேறினர் என்ற இவ்வூகத்துக்குப் பிரசித்த ரான சரித்திராசிரியர் ஒருவரும் சம்மதமளித்தல் கவனிக்கத்தக்கது: ஸ்ரீ: ரோமேச சந்த்ர தத்தர் எழுதிய "பழைய இந்திய நாகரீகம்" என்ற அரிய நூலின் முதற்றொகுதியில் * யாதவரைப்பற்றி எழுதப் பட்டிருப்பதாவது:-"கண்ணனைத் தலைமையாகக்கொண்ட யாதவர் கள் (வட) மதுரையைவிட்டு நீங்கிக் கூர்ச்சத்துள்ள துவாரகையிற் குடியேறினார்கள். அங்கே அவர்கள் அதிக காலம் தங்கவில்லை. அவர் கள் தங்கட்குள்ளே பெருங்கலகம் விளைக்க, (அவருட்பலர்) துவார கையை நீங்கிக் கடல்வழியே பிரயாணித்தனர். அங்ஙனம் பிரயா ணித்தவர்கள் தென்னிந்தியாவை அடைந்து ஆங்குப் புதுராஜ்யம் ஸ்தா பித்ததாக நம்பப்படுகின்றது" என்பதே. இவ்வாறு தத்தரவர்கள் எழுதுவது நச்சினார்க்கினியர் எழுதிய வேளிர் வரலாற்றோடு சில அமி சங்களில் ஒத்திருக்கின்றமை காணலாம். 'வேளிர் யாதவரே' எனக் கண்டு தமிழறிஞர் ஆங்கிலத்தில் வியாசமெழுத, அதனை நோக்கி யாதவர் தென்னிந்தியாவில் ராஜ்யம் ஸ்தாபித்ததாக நம்பப்படுகின்

  • Dutt's Civilization in Ancient India. Part I. page 219.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/23&oldid=990579" இலிருந்து மீள்விக்கப்பட்டது