பக்கம்:வேளிர் வரலாறு.djvu/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச் வேளிர் வரலாறு. ளால் நன்கு தெளியப்பட்டவை என்பர். இவர்களுள், காகதீயரும் காலசூரிகளும் விஜயநகர-நரபதிகளும் யாதவகுலத்தைச் சார்ந்தவ ரென்பது பிரசித்தமாம்; ஆகவே, அவரினத்தவராய்த் தக்ஷணத்திற் குடியேறியாண்ட சளுக்கர்களும் அவ் யாதவ வமிசத்தவரேயாதல் சொல்லாமலே அமைவதாம். இதனாலும், யாதவக்கிளைகளுள் சளுக்கருமடங்குதல் அறிந்துகொள்க. இனி, இச் சளுக்கிய-யாதவர், பண்டைத் தமிழ்வேளிருடன் ஒற்றுமைபெற்ற குலத்தவரென்பதற்குச் சிறந்த சான்றொன்று, பம்பாய்-கெஸட்டியரில் காணப்படுகின்றது ; + அஃதாவது:-வட தேசத்தே, ஹாரீத பஞ்சசிகர் என்ற முனிவர் யாகம் செய்துகொண் டிருந்தபோது, அவரது தீர்த்தபாத்திரத்தினின்று ஓர் அரசன் உண் டானான் ; 'சுளுகம்' என்னும் வடமொழிப் பெயர்பெற்ற பாத்திரத்தி னின்று உதித்தமைபற்றி அவன் வழியினர் சுளுகர் எனப் பெயர் பெற்றனர் என்பதாம்;டவடமொழி முறைப்படி 'செளளுக்யர்' எனத்

  • விக்கிரமார்க்கன் வழியினர், மாளவநாட்டுத் தாராநகரத்திலிருந்து

ஆண்டவர்கள்; போஜன் என்ற பிரபலஅரசன் இவ்வமிசத்தவனே, காலசூரிகள் யாதவரில் ஹேஹயாமிசத்தவராவர்; இவர்கள் கல்யாணபுரியிலிருந்து ஆண்டவர் கள்; சாளுக்யரின் சந்ததியா ராக இன்னோரைக் கூறுவர். காகதீய-கணபதிகள், ஓரங்கல் நாட்டையாண்டவர்கள்; பிரதாபருத்ரீயம் என்ற அலங்கார நூலாற் புனையப்பெற்ற பிரதாபருத் கிரன் இவ்வழியினனே; "உருத்திராநின்னுடைய ஒரங்கல்நாட்டில்” என்னுங் கம்பர் வாக்குங் காணத் தக்க து, கஜபதிகள், கிருஷ்ணா நதிக்குத் தெற்சே, குண்டூருக்கு அருகிலுள்ள கொண்ட வீட்டிலிருந்து ஒரிசா நாடாண்டவர்கள். விஜயநகரம்-1பா தவதரபதிகள்-இவர்கள் தென்னாடு முழு மையும் பல தலைமுறை பெரும்புகழுடனும் திறமையுடனும் ஆட்சிபுரிந்த பிற்கா லத்துச் சக்கரவர்த்திகள்; இவர்கள் ராஜதானி விஜயநகரமாகும். இவர்கள் வர லாறு, ஸ்வெல்துரை ழுெதிய "Forgotten Empire” முதலிய நூல்களால் அறியத்தக்கது. f Bombay Guetteer', Vol. 1, part II. pyago. 339. + இச்செய்திகளே, "இண்டியன் ஆண்டிகுரி-தொகுதி 7, பக் 7.5-லி லும் கூறப்படுகின்றன; ஆனால் பில்ஹணசவியின் விக்ரமாங்க-காவியத்தே-பிரம தேவர் ஒருகாலத்தில் சந்தியாகர்மஞ் செய்துகொண்டிருந்தபோது, இந்திரன் அவரிடம் வந்து, பூவுலகில் நிரீசு ரக்கொள்ள.க தலையெடுத்துவருதலால், அக்கேட் டை நீக்கத்தக்க மஹாவீரனொருவனை சிருஷ்டித்துத் தரவேண்டுமென்று பிரார்த் திக்க, அதற்கிரங்கிப் பிரமதேவரும் தம் சுளுகத்தை நோக்க, அப்பாத்ரத்தி னின்று மூவுலகும் புரக்கவல்ல ஒரு மஹாவீரன் வெளிப்பட்டான் என்றும், அவன் வழியினரே செளளூக்யர் என்றும், அக்குலத்தலைவ: ராக ஹாரீதரென்ப வரும், அவர்க்குப் பின் மானவ்யர் என்பவரும் உண்டானார்கள் என்றும், பிற சில வரலாறுகளும் கூறப்பட்டுள்ளன. (Ind. Ant, Vol. V, p. 317.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/30&oldid=990572" இலிருந்து மீள்விக்கப்பட்டது