வேளிர் வரலாறு. உக ரும், பாண்டிய நாட்டுக் ' காவிதிப்' பட்டமெய்தினோரும் குறுமுடி குடிப்பிறந்தோர் முதலியோருமாய் முடியுடை வேந்தர்க்கு மகட் கொடைக்குரிய வேளாளராம். உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி அழுந்தூர் வேளிடை மகட்கோடலும். அவன் மகனாகிய கரிகாற்பெருவளத்தான் நாங்கூர் வேளிடை. மகட்கோடலும் கூறு வர்.” எனவும் வேளாளர் பகைவர் மேலும், நாடுகாத்தன்மேலும், சந்து செய்வித்தன் மேலும் அரசரேவற்படி செல்லுதற்குரியர் ” எனவும் காண்க. இவற்றால், வேளாளருட் பலரைத் தமிழ்ப் பெரு வேந்தர் தம் அரசியலில் உயர் நிலையில் வைத்து மதித்துவந்ததோடு, அவரினத்துச் சிற்றரசரான வேளிருடைய பெண்களை அவ்வேந்தர் விரும்பி மணம்புரிந்துவந்தனரென்பதும் அறியலாம். சேரன் - செங்குட்டுவன் மனைவி ' இளங்கோ - வேண்மாள் ' என்று சிலப்பதி காரங் கூறுதலுங் (காதை - உரு - அடி. - ரு.) காண்க. பதிற்றுப்பத்தில் இத்தொடர்பு பலவாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வேளிர் பழைய க்ஷத்திரிய - வகுப்பினராய் நாகரீகமுதிர்ச்சி உடையரா யிருந்தமை பற்றி, உயர்குலத்தவராகிய தமிழ்வேந்தர் அவருடன் சம்பந்தஞ் செய்து வந்தனரென்பது இகனாற் பெறப்படுகின்றது. நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு முதுகுடி - மகட்பா டஞ்சிய மகட்பாலா னும்” (புறத்திணை - எஸ்.) என்புழி, இம்மணச் செய்தியைத் தொல் காப்பியனாரும் குறித்தனர் என்பர் நச்சினார்க்கினியர். வேளிரால், ஆதியிற் சிற்றரசுகள் தாபிக்கப்பட்டுவந்த காலங்க ளில், இவர்க்கும் சேர சோழ பாண்டியர்க்கும் அடுத்தடுத்துப் போர் நிகழ்ந்து வந்ததாக அறியப்படுகின்றது. அங்ஙனந் தாபிக்கப்பெற்ற பழைய வேளிர் நாடுகள் :- கொண்கானம், ஒளிநாடு, முத்தூற் றுக்கூற்றம், பொதிகைநாடு, மிழலைக்கூற்றம், குண்டூர்க் கூற்றம், வீரை, துளுநாடு முதலியன. பிற்காலத்தில் அவ்வேளிர்பால் மகட் கொண்டு சம்பந்தம் பெற்ற பேரரசர்கள் அவரது சிற்றரசுகளை ஆத ரித்து வந்ததோடு, அவரினத்து வேளாளர் பலரைத் தம் மாசியற்கு உரியவராக்கி நாடுகள்பல அளித்தும், வரிசைகள் கொடுத்தும் அமைச் சராகவும் தண்டத்தலைவராகவும் நியமித்துப் போற்றி வந்தனர். இங் நனம் அமைச்சுப் பூண்டவர்கள், பாண்டியரிடம் 'காவிதி' என்ற பட் டத்துடனும், சோழரிடம் 'ஏனாதி' என்ற பட்டத்துடனும் விளங்கினர்.
பக்கம்:வேளிர் வரலாறு.djvu/39
Appearance