பக்கம்:வேளிர் வரலாறு.djvu/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஙO வேளிர் வரலாறு. அதிகமானுக்கு ஒளவைபோலவும், ஆய்க்கு மோசியாரே பெரிது முரிமை பூண்டவரென்பது " திருந்து மொழி மோசி பாடிய ஆயும் ” எனப் பெருஞ் சித்திரனார் என்ற புலவர் கூறுதலால் (புறம் - கருஅ) தெரியலாம். வேள் - ஆயின் வள்ளன்மையையும் அருங்குணங்களையும் புற நானூற்றில் வரும் பாடல்கள் மிகவும் அழகுபடக் கூறுகின்றன. மோசியார் இவ்வள்ளலின் அரண்மனையைப் பற்றிப் பேசுமிடத்து, "அவன் தன் மனைவியரது மாங்கல்ய சூத்திரம் ஒழிய மற்றவை யனைத்தையும் பரிசிலர்க்கு வழங்கி விட்டனனாயினும், கொடுக்கும் இன்பத்தை அனுபவித்தறியாது தம்வயிறருத்திக் கழியும் மற்றப் பெருஞ்செல்வர்கள் மனைபோலப் பொலிவிழக்காது ஆயின் அரண் மனை அழகுமிகுந்து விளங்கும்” என்கிறார். இப்புலவர், ஆயைக் காணாதமுன்பு, பிறர் சிறிய இசையைக் கேட்டும் நினைந்தும் பாடியும் போந்த தமக்கு, அவனைக் கண்டதும் அவனது அருங்குணங்களும் பெருங்கொடைத்திறமும் அளவிறந்த அதிசயம் விளைத்தமையால், முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளினேனே - ஆழ்கென் னுள்ளம் போழ்கென் னாவே - பாவூர்க் கிணற்றிற் றூர்கவென் செவியே” எனத் தம் அறியாமையை இழிப்பதன் மூலம் ஆயின் உத்தமகுணங் களை வியந்தனர். இவ்வள்ளலின் அருமை பெருமைகள் தம்போன்ற பெரும்புலவர்களைப் பிணித்துவிட்டமைபற்றி புலவர்கள் நீயில்லாத உலகத்தில் இனி வாழாதிருக்கக் கடவர்” என்றும், ""பெரிதாக ஏத்தி னாலும் சிறிதும் உண ர மாட்டாத, பெருமையில்லாது பெருகிய செல் வத்தையுடைய அரசரை எம்மவர் பாடார் " என்றும் புகழுவர். (புறம் - ஙஎந.) இங்ஙனம், வேள் ஆயின் பேரபிமானத்துக்கு உரிமை பூண்டு விளங்கிய இப்புலவர், மலைக்காட்டுவழியே ஒருகாற் செல்லும் போது, ஆண்டுக் களித்து வாழும் யானைக் கூட்டங்கள் தம் கண் ணுக்குப் புலப்பட, அப்போது - " மழைக்கணஞ் சேக்கு மாமலைக் கிழவன் வழைப்பூங் கண்ணி வாய்வா ளண்டிரன் குன்றம் பாடின கொல்லோ களிறுமிக வுடைய இக்கவின்பெறு காடே ”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/46&oldid=990616" இலிருந்து மீள்விக்கப்பட்டது