பக்கம்:வேளிர் வரலாறு.djvu/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேள் - ஆவி. வ . ஆவி என்பான் வேளிர்குலத் தலைவருட் பழைமையானவரில் ஒருவன். அகநானூற்றில்:- வண்டுபடத் துதைந்த கணணி யொண்கழல் உருவக் குதிரை மழவ ரோட்டிய முருக னற்போர் நெடுவே ளாவி அறுகோட் டியானைப் பொதினி” முழவுறழ் திணிதோள் நெடுவேள் ஆவி பொன்னுடை நெடுநகர்ப் பொதினி” (சுக) என வருதலால், இவ்வாவி வேளிர் தலைவனும் சிறந்த வீரனும் பொதினி என்னும் நகர்க்கு உரியவனுமானவன் என்பது உணரலாம். அகநானூற்று அரும்பதவுரைகாரர்- நெடுவேளாவி - குறுநில மன்னன்; பொதினி - ஆவிமலை” என்று எழுதலின், இவன் இருந் தாண்ட பொதினி என்ற நகர், அப் பெயர்வாய்ந்த மலையின்கண் உள்ளதென்பது விளங்குகிறது. இப் பொதினி என்பது, இப்போது பழனி எனவழங்கும் மலையும் ஊருமாமெனவும், பழனிக்கு ஆவிபின் குடி என்பதே பழைய வழக்காகத் தெரிதலால், அது வேள் - ஆவிக் குரிய ஊர் என்பதை நன்கு விளக்குவதென வும், பழனி என்ற வழக்குப் பழைய நூல்களிற் காணப்படாமையின், பொதினி என்பதே பழனி எனப் பிற்காலத்து மருவியதாகல் வேண்டுமெனவும், வேளா வியின் வழியினனாகிய பேகன் என்ற வள்ளலை வையாவிக்கோ' என நூல்கள் வழங்குதற்கேற்ப, பழனியிலுள்ள குளமொன்று வையாபுரி (வையாவிபுரி) என இன்றும் வழங்குவதென வும்-ஸேதுஸம்ஸ்தான வித்வான் ஸ்ரீமத்-ரா. இராகவையங்கார் அவர்கள் கருதுவர்* இவ வாவியின் வழியினர் (ஆ வியர்' என வழங்கப்பெறுவர்; இம் மர பின னாகிய பேகன் என்ற வள்ளல் 'ஆவி யார் பெருமகன்' எனக் கூறப் படுதல் காண்க.

  • செந்தமிழ்”த் தொகுதி - உ, பகுதி - க; ஆவி நன்குடி என்ற விஷ

யம் பார்க்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/51&oldid=990611" இலிருந்து மீள்விக்கப்பட்டது