பக்கம்:வேளிர் வரலாறு.djvu/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளி - எவ்வி. நள் வேளாவிக்கோ மாளிகை என்று பிரசித்திபெற்ற மந்திரமொன்று அவ் வேளின் பெயராற் சேரன் செங்குட்டுவன் காலத்தும் விளங்கியது. இதனை- பேரிசை வஞ்சி மூதூர்ப் புறத்துத் தாழ்நீர் வேலித் தண்மலர்ப் பூம்பொழில் வேளா விக்கோ மாளிகை காட்டி” (கா- உஅ; அ-க்கூசு-அ) என்னும் சிலப்பதிகார-அடிகளால் உணர்க. புறநானூற்றில் கருவூர்ப் பக்கத்தில் வேண்மாடமொன்று கூறப்படுதலும் இவ் வேளாவிக்கோ மந்திரமேபோலும்'. மதுரைக்குத் தெற்கே ஒருகாத தூரத்தில், ஆவியூர் என்னும் பெயரில் ஓர் ஊர் உள்ளது. இதுவும், இவ் வாவி யின் பெயராற் பல ஊர்கள் வழங்கப்பட்ட செய்தியை வெளிப்படுக்கும். வேள் - எவ்வி. பழைய வேளிர் தலைவருள் எவ்வி என்னும் பெயர்பெற்றவன் ஒருவன். கடைச்சங்கத்தவரான கபிலர் என்னும் புலவர், இருங் கோவேள் என்பவனை எவ்விதொல்குடி” யைச் சேர்ந்தவனாகக் கூறுவர். வேள் எவ்வியின் நாடு மிழலைக்கூற்றம் என்பதும் இக் கூற்றம் கடற்கரையைச் சார்ந்து, பல ஊர்கள் உடையதென்பதும் உச - ம் புறப்பாட்டில்- முந்நீ ருண்டு முந்நீர்ப் பாயும் தாங்கா வுறையு ணல்லூர் கெழீஇய ஓம்பா வீகை மாவேள் எவ்வி புனலம் புதவின் மிழலை” எனவரும் அடிகளால் விளங்குவனவாம். இம் மிழலைக் கூற்றத்தில் நீடூர் என்பது எவ்வியின் தலைநகரமென்றும் இதனை அடுத்த எவ்வி

  • சோழன் முடித்தலைக்கோப் பெருநற்கிள்ளி கருவூரிடஞ் செல்வானைக்

கண்டு சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறையொடு வேண்மாடத்து மேலிந நீது உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது” எனப் புறநானூற்றில் வருதல் காண்க. (கரு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/53&oldid=990609" இலிருந்து மீள்விக்கப்பட்டது