பக்கம்:வேளிர் வரலாறு.djvu/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேள் - எவ்வி. யும் வெளியாகின்றன. எவ்வி பெரும்போரொன்றில் விழுப்புண்ணும் றான் என்ற வார்த்தை நாடெங்கும்பரவ அதனை, இப்புலவர் விடியற் காலத்தே சிலர் சொல்லக் கேட்டுப் பெரிதும் மனமிரங்கி-"இது பொய்யாகக்கடவது, பொய்யாகக்கடவது; யானைகளைப் பரிசிலர்க்குக் கொடுக்கும் சிறப்பும் வலியுமுடைய அகுதை என்பான்மேற் சக்க ரம்பட்டதாகச் சொல்லப்பட்ட வார்த்தைபோல, இதுவும் பொய்யாக வேண்டும்; பெரிய பாண்சுற்றத்துக்கு ஆதாரமாகிய எவ்வியின் மார்பினிடை வேல்தைத்த புண்கள் பலவாயின என்று விடியற்காலத் துச் சொல்லப்பட்ட வார்த்தை” என்னுங் கருத்துப்பட "பொய்யா கியரோ பொய்யாகியரோ” என்ற பாட்டைக் கூறி வருந்தித் தாம் அவ்வள்ளலை நேரிற் கண்டுவர விரைந்து சென்றார். சென்றும் என்? விடியற்காலத்துக் கேள்விப்பட்ட அவ் வார்த்தை பொய்யாகாது மெய்யேயாகியது. வேல் தைத்ததனால் எவ்வி மேலுலகமெய்த அவன் கற்புடை மனைவி நடத்தும் உத்தரகிரியையைக் காணும் துர்ப் பாக்கியமே புலவர்க்குக் கிடைத்தது. அப்போது புலவர் "அந்தோ! வருந்தக்கடவேனோ, யான்; என் வாழ்நாள் இனி மாய்வதாக. பிடி யினது அடிபோன்ற சிறிய விடத்தை மெழுகித் தான் விரும்பிய காதலியால் புல்மேல் வைக்கப்பட்ட இனிய சிறுபிண்டத்தை எவ்வா றுண்டான் கொல்லோ, உலகத்தார் யாவரும் புகும்படி திறந்த வாயிலை யுடைய, பலரோடுங் கூடியுண்டலை மருவியவன்" எனத் தம் மாற் றாமை தோன்றக்கூறிப் புலம்பினர். (புறம் - உநச) வேள் எவ்வியின் வரலாறு இதற்குமேல் அறிய இடமில்லாமற் போனது வியசனிக்கத்தக்கது. இவ் வேள், வேல்தைத் திறக்கும்படி நேர்ந்த பெரும்போர், யாருடன் நடத்தப்பட்டதென்பது விளங்க வில்லை. மாங்குடி கிழார் என்ற புலவர், பாண்டியன் தலையாலங்கா னத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடுமிடத்தில்- ஓம்பா வீகை மாவே ளெவ்வி புனலம் புதவின் மிழலையொடு குப்பை நெல்லின் முத்தூறு தந்த கொற்ற நீள்குடைக் கொடித்தேர்ச் செழிய! (புறம்- உச)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/55&oldid=990607" இலிருந்து மீள்விக்கப்பட்டது