பக்கம்:வேளிர் வரலாறு.djvu/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேள் - பேகன்.

மன இவன், மேலே தனியாகக் குறித்த ஆவியின் குடியில் உதித்த பெருந்தகையாவன்; இவனை வையாவிக்கோப் பெரும்பேகன் எனவும் வழங்குவர். கடைச்சங்கநாளில் விளங்கிய கடையெழுவள்ளல்களில் இவனும் ஒருவன் என்பது முரசுகடிப்பிகுப்பவும்” என்னும் புறப் பட்டாலும் (கருஅ) சிறுபாணாற்றுப் படையில் அச. முதல் கஉஉ. வரையுள்ள அடிகளாலும் விளங்கும். இவனது வரையா வள்ளன் மையைப் பாணர் என்னும் பழைய புலவர் புகழுமிடத்து - "குளத்தி லும் .வயலிலும் களர் நிலத்தும் ஒப்பப்பெய்யும் வரையறையில்லாத மாரிபோலப், பேகனும் கொடையிடத்துத் தான் அறியாமைப் படுவ தல்லது, பிறர் படைவந்து பொரும்போது அப்படையிடத்துத் தான் அறியாமைப்படான்"- என்ற கருத்துப்பட, "அறுகுளத் துகுத்தும் அகல்வயற் பொழிந்தும் உறுமிடத் துதவா துவர்நில மூட்டியும் வரையா மரபின் மாரி போலக் கடாஅ யானைக் கழற்காற் பேகன் கொடைமடம் படுத லல்லது படைமடம் படாஅன்பிறர் படைமயக் குறினே என அவனது கொடைமடத்தைச் சிறப்பிப்பர். இவனது கொடை மடத்தைப்பற்றிய மற்றொரு செய்தியுமுண்டு; இவ்வள்ளல் ஒருகால் மலைவழியே செல்லும்போது மயிலொன்று தன் சிறகை விரித்து ஆடு வது கண்டு, 'அது குளிருக்காற்றாது வருந்தி நடுங்குகின்றதுபோ லும்' என்று கருதித் தான் மேற்போர்த்திருந்த உயர்ந்த படத்தை அதன்மேற் சார்த்திச் சென்றான் - என்பதாம். இச்செய்தி - உடாஅ போரா ஆகுத லறிந்தும் படாஅ மஞ்ஞைக் கீத்த எங்கோ கடாஅ யானைக் கலிமான் பேக!” எனப் பாணரும் (புறம் - கசக)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/58&oldid=990604" இலிருந்து மீள்விக்கப்பட்டது