பக்கம்:வேளிர் வரலாறு.djvu/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளிர் வரலாறு. பாரி பறித்த பறியும்* பழையனூர்க் காரியன் நீந்த களைக்கோலும்+-சேரமான் வாராயோ என்றழைத்த வார்த்தையும் இம்மூன்றும் நீலச்சிற் றாடைக்கு நேர்” (தமிழ்நாவலர் சரிதை) என்ற அழகிய பாடலைப்பாடி, அன்றிரவு அவர்கள் தமக்கிட்ட இலைக் கறியமுதை உண்டு மகிழ்ந்து- வெய்தாய் நறுவிதாய் வேண்டளவுந் தின்பதாய் நெய்தா னளாவி நிறையிட்டுப்-பொய்யே அடகென்று சொல்லி யமுதத்தை யிட்டாள் கடகஞ் செறியாகோ கைக்கு" (ஷை)

  • ஒளவையார் பாரிபாற் பரிசில் பெறச் சென்றபோது, அவ்வள்ளல் இவ

எருமைபெருமையறிந்து இவரைப் பிரிதற்கு இயலாது பரிசில் நீட்டித்தனனாக, இவர் அவனைப் பரிசிலீந்து விடுக்கும்படி வற்புறுத்த, அவ்வேண்டுதலை அவன் மறுத்தற்கியலானாய் வேண்டியவற்றை அளித்து விடுத்தும், இவர் பிரிவாற்றாது தன்பால் இவர் திரும்பிவரச் சூழ்ச்சிசெய்து, இவர் செல்லும் வழியிற் சிலரைப் போக்கித் தன்பாற்பெற்ற பொருள்களைப் பறித்துவரும்படி செய்ய, அதனால் பெற்ற பரிசில்களையிழந்த ஒளவையார், பாரியெண்ணியபடியே மீண்டுவந்து அவ்வள்ளலிடம் நிகழ்ந்ததை அறிவிக்க, அவன் முகத்தால் நொந்து, அவர் மீண்டமைக்கு அகத்தால் உவந்து நெடுங்காலம் அளவளாவிப் பெருமகிழ்வெய்தி, முன்னிலும் மிகுதியாக அரும்பொருள் நல்கி விடுத்தனன்” எனவும்; + பழையனூர்க்காரி என்பவனிடம் சென்றிருந்த இவர், அவன்பாற் பரி சில் பெற்று வேற்றூர்போக வெண்ணிக், கொல்லைப்புறத்தே களையெடுக்கு மிடத்தில் நின்ற அவன்பாற் சென்றாராக, இவரது உள்ளக்குறிப்பை உணர்ந்த அக்காரி, இவர்பிரிதற்கு உடம்படாது சிலகாலம் தங்கும்படி சூழ்ந்து, அக்களை : யெடுத்த விடத்தை அளத்தற்குரிய கோலொன்றை இவர்பாற் கொடுத்து இதனை அளந்துவருக என்று கூறி அவன் வேறுதொழில் மேலிட்டுச் செல்ல, இவரும் அங்ஙனமே அளந்து அன்று விடைபெறக்கூடாமையால் பின்னும் அவன்பாற் சிலகாலம் தங்கினார் எனவும்,

  • சேரன் அரண்மனையில், விருந்திற்கு வந்த பலருடன் ஒளவையாரும் உண்

டற்கு இருந்தபோது, ஆங்கு வேறு பெரிய விருந்தினனொருவன் புகுந்தானாக, சேரமான் அவனுண்ணத்தக்க இடம் ஒழிக்க நினைந்து, ஆண்டுள்ள பலரும் வேற் றோராதலின் ஒன்றுஞ் சொல்ல இயலானாய்த், தன் அன்பிற்குரிய பெருந்தமர் இவ்வெளவையாரேயாயிருந்தமையால், இவரைநோக்கி 'ஒளவையே! வாராய் என ஆண்டுநின்று வருமாறு அழைக்க, இவர், வந்தவனுக்குத் தம்மிருப்பிடத் தைக் கொடுத்துப் பின் அச்சோனுடன் உண்டனர்” எனவும் கூறுவர்; இம்மூன் றும் எவ்வாறு பேரன்பேயடியாகப் பிறந்தனவோ, அவ்வாறே நீலச்சிற்றாடை, கொடுத்ததும்: ஆதலின், இவை தம்முள் ஒக்கும் என்றவாறு. இப்பாட்டில், கலனும்' எனவும், 'வாராய் எனவழைத்த வாய்மொழியும்' எனவும் பாடமுண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/72&oldid=990620" இலிருந்து மீள்விக்கப்பட்டது