பக்கம்:வேளிர் வரலாறு.djvu/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மற்றை வேளிர். வேளிர்குலத்தே சங்ககாளில் தமிழகம் புகழ விளங்கிய பெரு வள்ளல்கள் மேற்கூறிப்போந்த வேளிர் அறுவருமேயாவர். இவர்க ளன்றி, தமிழ்வேந்தராகிய சேரசோழபாண்டியர் சார்பிற் சிற்றரச ராகவும், மகட்கொடுத்துச் சம்பந்தஞ் செய்தவராகவும், அமைச்சராக வும், படைத்தலைமை தந்திரத்தலைமை வகித்தவராகவும் அமர்ந்த வேள்குலத்தலைவர் பல்லோ ரென்று தெரிகின்றது. நாங்கூர்வேள் அழுந்தூர்வேள் என்போர், சோழன் - உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னிக்கும் அவன் மகன் கரிகாற்பெருவளத்தானுக்கும் முறை யே பெண்கொடுத்தவர்கள். (தொல். பொருளதி. பக் - ருச) மையூர் கிழானாகிய வேண்மான், இளஞ்சேரலிரும்பொறையின் தாய்ப்பாட்ட னும் அமைச்சனுமாக விளங்கியவன். (பதிற்றுப். கூ-பத்து) நன்னன் வேண்மான் அழும்பில் வேள் என்போர், சேரரது படைத்தலைமை யும் தந்திரத்தலைமையும் முறையே வகித்தவர். இனி, இவ்வேளிர் கள்பதினால்வர் (கரு) எனவும், பதினொருவரெனவும் (உச) அக நானூற்றுட் கூறப்படுகின்றனர். இவரிற் பதினால்வர் சேர்ந்து காமூர்த்தலைவனான கழுவுள் என்னும் இடைக்குலத்துச் சிற்றரச னைப்* போரில் வென்றனர் என்பதும், கரிகாற்பெருவளத்தான் வெண்ணிவாயில் என்னுமிடத்து நிகழ்த்திய பெரும் போரிலே தோற்றவருள் பதினொருவேளிர் சேர்ந்தவர் என்பதும் கஙரு, உசசா-ம் அகப்பாட்டுக்கள் குறிக்கின்றன. வேளிர்க்கும் திதியன் என்பானுக்கும் நிகழ்ந்த போரொன்றும் அந்நூலிற் கூறப்பட்டுள் ளது. (ஙங2) இனிச் சங்கநாளில் விளங்கிய வேறு வேள்குலத்தவ ராகத் தெரிந்தோர் - வெளியன் வேண்மான், பிடவூர் வேண்மான், நெடுவேளாதன், இளவிச்சிக்கோ, இருங்கோவேள், ஆலஞ்சேரி - அயிந்தன் முதலியோராவர். இவர்களைப்பற்றிய வரலாறுகள் தெளி வாக விளங்க இடமில்லை: ஆதலின் நூல்கள் நோக்கி உணருமாறு விடப்பட்டன. இவ்வாறு, பழைய வேளிர் வரலாறுகள், சங்க நூல்களிற் கூறப் பட்டவாறு ஆராயப்பட்டன. இவர் வழியினராய்ப் பிற்காலத்து

  • பதிற்றுப்பத்து, எக, அஅ-ம் பாடல்களிலும் இவன் செய்தி வருகின்றது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/92&oldid=990649" இலிருந்து மீள்விக்கப்பட்டது