பக்கம்:வைணவ உரைவளம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய திருமொழி 181 உடையவளாக இருக்கின்றாள் இவள். இந்த மனநிலை தான் மகள்' (தலைவி) என்று குறிப்பிடப்பெறுகின்றது. இத் திருமொழியிலும் நம்மாழ்வார் திருவாய்மொழி யிலும் மகள் பாவனையில் பேசும் பதிகங்கள் யாவும் இந்த மன நிலையையே குறிக்கின்றன என்பதை இந்தப் பதிகங் களை ஊன்றிப் படிப்பதனால் அறியலாம். 79 கணமருள மயிலகவு கடிபொழில்சூழ் நெடுமறுகில் திணமருவு கனமதிள்சூழ் திருக்கண்ண புரத்துறையும் மணமருவு தோளாய்ச்சி யார்க்கப்போய், உரலோடும் புணர்மருதம் இறகடந்தாற் கிழந்தேனென் செறிவளையே." (கண மருவு-திரள் மிகுந்துள்ள; கடிபொழில்மணம்மிக்க சோலைகள்; நெடுமறுகு-பெரிய வீதி, கனம்-கனகயமான மணம் மருவு-பரி மளம் பொருந்திய, ஆர்க்க-கட்ட: புணர் மருதம்-இரட்டை மருத மரங்கள்; இறமுறிந்து விழும்படி: மகள் பாசுரம் : தயிர் பால் வெண்ணெய் முதலிய வற்றைக் களவு செய்த குற்றத்திற்காக ஒர் அபலையின் (யசோதை) கையினால் உரலோடு சேர்த்துப் பிணிக்கப் பட்ட அசக்தரைப்போலக் கிடந்த நிலையிலும், அப்படிக் கட்டுண்டுத் தளர்நடையிட்டுத் தவழ்ந்து செல்லும் பருவத் திலும், இரட்டை மருத மரங்களை முறித்து அவற்றில் _5_নেল ললেন:4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/206&oldid=920816" இலிருந்து மீள்விக்கப்பட்டது