பக்கம்:வைணவ உரைவளம்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 56 வைணவ உரைவளம் மல்குர்ேப் புனல்படப்பை இரைதேர்வண் சிறுகுருகே மல்குர்ேக் கண்ணேற்கோர் வாசகங்கொண் டருளாயே." (நல்கி-தந்து (அதுக் ரகித்து); பொழில் ஏழும்ஏழு உலகங்களையும்; நல்கத்தான் ஆகாதுகிருபை பண்ணலாகாது; மல்கும் நீர்-நிறை யும் நீர்; படப்பை-தோட்டக் கூறு; வாசகம்-செய்தி) இது நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழிப் பாசுரம். இது தூதுப்பதிகப் பாசுரம். பராங்குச நாயகி சிறுகுருகை நோக்கிப் பேசுகின்றாள். பெருகி நீர் வழியும் தோட்டங் களில் இரையாகிய மீன்களைத் தேடுகின்ற சிறு குருகே! உலகங்கள் ஏழினையும் தானே விரும்பி அவற்றிற்கு விருப்பமில்லாதனவற்றை நீக்கிக் காப்பாற்றுகின்ற நாராயணனைக் கண்டக்கால், எனக்குத் திருவருள் புரிதல் தான் தகாததோ?’ என்று கூறி, அவர் கூறுகின்றதொரு வார்த்தையைக் கேட்டு வந்து அழுத கண்களையுடைய எனக்குச் சொல்லியருளல் வேண்டும்' என்கின்றாள். அருளாய் : தான் சனககுல சுந்தரியாக இருந்தும், பறவைகளை நோக்கி அருளாய்' என்கின்றாள்; அப்பறவை களால் தனக்குக் கிடைப்பது பகவத் விஷயம் ஆகையாலே, இதிலுள்ள ஓர் ஐதிகம்: பட்டர் காலத்தில் நம்பி ஏறு திருவுடையான்' என்ற திருநாமம் கொண்ட ஒரு சாத்தாத பூரீவைணவர் இருந்தார்; அவர் பரமபதிக்க, அந்தச் செய்தி யைக் கொண்டு வந்து பட்டர் சந்நிதியில் விண்ணப்பம் செய்ய வந்தவர் ஏறுதிருவுடையதாசர் திருநாட்டுக்கு கடந்தார் என்றாராம். பட்டர் துணுக்குற்று எழுந்து 29, திருவாய், 1.45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/279&oldid=920931" இலிருந்து மீள்விக்கப்பட்டது