பக்கம்:வைணவ உரைவளம்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 2.85 (சிக்கென - உறுதியாக, புறப்படா-வெளிப்பட் டிராமல்; ஒக்க-சமமாக, புகுந்தான்.நுழைந்: தான்: மிக்க - மிகுந்த, துளக்கு-ஐயம்: எங்கும்-எவ்விடத்திலும்; பக்கம் நோக்க அறியான்-திரும்பிப் பார்ப்பதுமின்றியேயிரா நின்றான்) இது திருவாய்மொழிப் பாசுரம், ஆழ்வார் இறைவ னைச் சிக்கெனப்பிடித்ததைத்தெரிவிப்பது. இப் பாசுரத்தில் எம்பெருமான் தன்னுடன் கலந்து மிக்க ஒளிபெற்று வேறு போக்கிடமற்றுத் தன் பக்கலிலேயே படுகாடு கிடக்கின்ற படியைப் பேசுகின்றார் ஆழ்வார்: அழகிய தாமரை மலர் போன்ற திருக் கண்களையுடைய என் இறைவன் மிகச் சிறிய இடமும் புறம்பு போகாதபடி உலகுகளைத் தன் நினைவிற்குள்ளே ஒரே விதமாக அடக்கி, வெளியில் புலப்படாதபடி என் மனத்திற் புகுந்தான்; புகுந்த பின்னர். ஞான வெள்ளத்தால் வந்த மிக்க ஒளியையுடையவனாய் நடுக்கமும் தீர்ந்து, அமுதம்போன்று இனியனாய் ஓரிடத்தி லும் பக்கத்தைப் பார்க்கின்றிலன்' என்கின்றார். ‘எங்கும் பக்க நோக்கறியான்' என்றவிடத்து ஈட்டில் ஒர் ஐதிக உரையாடல்; மணக்கால் நம்பி ஆளவந்தாரைச் சிறந்த கடைக்கண் நோக்கால் ஆட்கொண்ட பிறகு ஒரு நாள் குருகைக் காவலப்பனிடத்தில் ஒரு யோக இரகசியம் உண்டு' என்று ஆளவந்தார்க்குத் தெரிவித்தார். அந்த இரகசியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற பேரவா எழுந்தது ஆளவந்தாரிடம். உடனே காவலப்பன் எழுந் தருளி யிருந்த கங்கை கொண்ட சோழபுரத்திற்குச் சென்றார். அப்போது காவலப்பன் ஒரு குட்டிச் சுவரில் யோகத்தில் எழுந்தருளி யிருந்தார். அவருடைய சமாதி நிலைக்கு ஊறு விளைவிக்க வொண்ணாது என்று எண்ணிய ஆளவந்தார் அவருக்கு இப்பால் நின்றார். யோக நிலையில் இருந்த அப்பனும் திருப்பிப் பார்த்து, இங்குச் சொட்டைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/308&oldid=920995" இலிருந்து மீள்விக்கப்பட்டது