பக்கம்:வைணவ உரைவளம்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 3 * 5 காலம் என்னும் ஒரு பொருள் உள்ளவரையிலும் வேறொரு தெய்வத்தை யான் உடையேனல்லேன்" என்கின்றார். "சீற்றத்தோடு அருள் பெற்றவன் : இது பிரகலாதாழ் வானைச் சொன்னபடி, நரசிம்ம பகவானுக்கு இரணியன் மேல் அளவு கடந்த சீற்றம் பொங்கிச் செல்லுகையில், சிறுக்கனான பிரகலாதாழ்வான் எங்ங்னே அணுகி நிற்க வல்லனாயினான்? என்று எம்பெருமானாரைச் சிலர் கேட்டார்களாம்" அதற்கு அவர் அருளிச் செய்த விடை: *சிம்மம் ஆனைமேலே சீறினாலும் குட்டிக்கு முலையுண்ண லாம்படி இருக்கு மன்றோ?' ' என்றாராம். ஆச்ரித வாத் சல்யத்தாலே அவர்கள் விரோதிமேலே சீறின சீற்றமா னால் பின்னை அவர்களுக்கு அணையவொண்ணாதபடி இருக்குமோ?’ என்று அருளிச் செய்தார் என்றபடி. இவ்விடத்திற்குப் பொருத்தமாக, இழவு தரியாதோர் ஈற்றுப்பிடி இளஞ்சீயர் தொடர்ந்து முடுகுதலும் குழவி யிடைக்காலிட் டெதிர்ந்துபொரும் கோவர்த் தனமென்னும் கொற்றைக் குடையே"2" என்ற பெரியாழ்வார் திருமொழி நோக்கத்தகும். 1 48 துயர மேதரு துன்ப இன்ப வினைக ளாய்அவை அல்லனாய் உயர கின்றதோர் சோதியாய் உல கேழும் உண்டுமிழ்ந் தான்தனை அயர வாங்கும் நமன்த மர்க்கரு நஞ்சி னை அச்சு தன்தனைத் தயர தற்கும கன்தனை யன்றி மற்றி லேன் தஞ்ச மாகவே,2’ 26. பெரியாழ். திரு. 3.5:2 27. திருவாய் 3.6:8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/338&oldid=921060" இலிருந்து மீள்விக்கப்பட்டது