பக்கம்:வைணவ உரைவளம்.pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 蟹25 திரிவான-உலாவுகின்றவனான தாளிணைஇரண்டு திருவடி) இது திருவாட்டாறு என்ற திவ்விய தேசத்தின்மீது மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருவாய்மொழியிலுள்ள ஒரு பாசுரம். இதில் ஆழ்வார், பரமபதத்திற்குச் செல்ல அர்ச்சிராதி நெறியை உண்டாக்கித் தந்த திருவாட் டாற்றில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான் பணித்த வகையே நான் பரமபதத்திற்குச் செல்லப் போகின்றேன்: தேன் பொருந்தியிருக்கின்ற மலர்களையுடைய திருத்துழா யானது விளங்குகின்ற திருவடிகளை யுடையவனாய்ச் செழுமை பொருந்திய கருடப் பறவையின் மேல் உலாவு கின்றவனான எம்பெருமானுடைய இரண்டு திருவடிகளும் என் தலைமேலே இருக்கின்றன; ஆதலால், நெஞ்சே! நரகத்தைப் பார்த்துச் சிரிப்பாய்' என்கின்றார்.

  • நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே : இதற்கு ஐதிகம். 'பரமபதம் கிட்டிற்று என்னாக் கடுகக் கால் வாங்கிப் போகப் பாராதே காண்! பல நாட்கள் நம்மைக் குடிமக்கள் ஆக்கி எளிவரவுபடுத்தின இவ்வுலக வாழ்க்கையைப் (சம்சாரத்தை) புரிந்து பார்த்துச் சிரி: *உன்னை அடியறுத்தோமே" (உன்னை வென்றோமே) என்று பார்த்துச் சிரி ' என்கின்றார். பிள்ளைகழகிய மன வாளப் பெருமாள் அரையர் ஒருநோயால் வருந்தா நிற்க, திரு வரங்கநாதன் அவருக்குப் பரமபதம் கொடுக்கத் திரு வுள்ளம் பற்றித் திருமாலை, திருப்பரிவட்டம் முதலான வரிசைகளைக் கை விட்டருளின அளவிலே நானே யப் பெறு கின்றேன் நரகத்தை நகு நெஞ்சே' என்று இப்பாசுரத்தைச் சொல்லிக்கிரத்தியைப்(கட்டியைப்) பார்த்துச் சிரித்தாராம். நேரகத்தை நகு" என்ற இவ்விடத்திற்கு நரகலோகத்தைப் பார்த்துச் சிரி என்றுசிலர் பொருள் கூறுவர்: அது வேண்டா; சம்சாரத்திற்கே நரகம் என்று பெயராதலால் சம்சாரபூமி என்ற பொருளே சண்டுக் கொள்ளத் தகும்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/548&oldid=921378" இலிருந்து மீள்விக்கப்பட்டது