பக்கம்:வைணவ உரைவளம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வைணவ உரைவளம் என்று அவன் பெயரோடு அமைந்து கிடக்கின்றது. இவன் கண்ணபிரானிடம் பலவகையான ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றவன்; ஒருவர்க்கும் அஞ்சாமல் தன் முனைப்புக் கொண்டு சாதுசனங்களை இம்சித்துக் கொண்டிருந்தான். இதனைக் கண்ட கண்ணன் மிகவும் வருந்தி நண்பனாகிய இவனைக் கொல்வது தகாது; ஏதாவது செய்தேயாக வேண்டும்' என்று வருந்தி, ஒருநாள் நீ இப்படிச் செய்வது தகாது' என்று அறிவுரை வழங்கினான். அசுர இயல்புள்ள அந்த மாலிகனும் தன் வாயில் வந்தபடி பிதற்றி, நீ எல்லா ஆயுதங்களைக் கையாளும் முறையைக் கற்பித் தாய்; திருவாழிப் பயிற்சியை மட்டிலும் கற்பித்தாய் இல்லை' என்று கண்ணன்மீது குறை கூறினான். கண்ண னும் இதில் பழகுவது உனக்கு முடியாது; எனக்கே அசாதாரணமானது" என்று சொல்ல, அவனும் என்னால் முடியாததும் ஒன்று உண்டோ? நீ அவசியம் அப்பயிற்சி யைக் கற்பித்தே ஆகவேண்டும்' என நிர்ப்பந்தித்தான். கண்ணன் அவனையொழிக்க இதுதான் தக்க சமயம்’ என்று திருஉள்ளம் கொண்டான். சக்கரப் படையை எடுத்துத் தன் ஒற்றை விரலால் சுழற்றி மேலெறிந்து கையிலேற்றிக் காட்டினான் கண்ணன். இஃது எனக்கு அரிதாமோ?’ என்று மாலிகன் சொல்ல, ஆம்; இஃது உனக்கு அரிதேயாகும்" என்று கண்ணன் வற்புறுத்திச் சொல்லவும் அதனை அவன் கேளாமல் அத்திருவாழியை வாங்கிச் சுழற்றி யெறிந்துப் பிடிப்பதாக நினைத்துத் தன் கை விரலைக் கழுத்துக்கு அடுத்து வைத்துக் கொண்டு நின்றான். அப்போது அத்திருவாழி சுழன்று வருவதற்கு இடம் போதாமையால் அதன் வீச்சு இவன் கையில் பிடிபடாமல் இவன் தலையை அரிந்து விட்டது என்பது கதை. இவ்வரலாறு எந்தப் புராணத்திலும் காணப் படாதது. வான்மீகி முனிவர் நான்முகன் வரத்தினால் பகவதவதார வரலாறுகளைத் தாமாகவே நேரில் கண்டது போலவே, ஆழ்வார் பெருமக்களும் தாமாகவே கண்ட வற்றில் இவ்வரலாறு ஒன்று என்பதாகக் கொள்வர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/55&oldid=921380" இலிருந்து மீள்விக்கப்பட்டது