பக்கம்:வைணவ உரைவளம்.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 527 உயிர்காத்து ஆட்செய்மின் இவ்வாறு கூறுகின்றார். கவிபாடுதல் வாக்கினால் செய்யப் படுகின்ற அடிமை ஆகை யாலே. ஆட்கொள்வான் ஒத்து என் உயிர் உண்ட மாயன் 24 அன்றோ? அடிமை கொள்வாரைப்போலே புகுந்து மற்றைப் படியேயாய் இருக்கும் பலிப்பது, பாதுகாத்துக் கொள்ளுங்கோள். உயிர் காத்து ஆட்செய்மின்' என்று ஈடுபட்டுச் சொன்னதற்குச் சம்வாதம் காட்டுகின்றார். ஆழங்காலிலே இழிந்து அமிழ்வார் அவ்விடத்தே கொண்டைக்கோல் நாட்டுமாறுபோலே, கொண்டைக் கோல் 25 நாட்டுகின்றார் ஆழ்வார்' என்று சிற்றாள் கொண்டான் பணிப்பர். இவ்விடம் பரப்புத்துறை இவ்விடம் மடு என்று நிலவர் எல்லை குறிக்குமாறுபோலே. 25O கண்ணா அசுரர் நலிவுஎய்த நல்ல அமரர் பொலிவுஎய்த எண்ணா தனகள் எண்ணும் கன் முனிவ ரின்பம் தலைசிறப்ப பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி தென்னா என்னும் என் அம்மான் திருமா லிருஞ்சோ லையானே?" (நண்ணா- கிட்டத்தகாத, நலிவு- அழிப்பு: பொலிவு-மகிழ்ச்சி: பண்.ஆர்-பண்நிறைந்த; 24. திருவாய் 9.6;7 25. கொண்டைக் கோல் என்பது, நிலவராய் இருப்பார் ஆறுகளிலும்மடுக்களிலும் மேடுபள்ளங் களுக்கு அடையாளமாக நடுகிற கோல், 26. திருவாய் 10.7:5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/550&oldid=921381" இலிருந்து மீள்விக்கப்பட்டது