பக்கம்:வைணவ உரைவளம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 வைணவ உரைவளம் இதில் குறித்த இதிகாசம் : கண்ணபிரான் கம்சனைக் கொன்று உக்கிரசேனனுக்கு முடிசூட்டிய அன்பு, அவந்தி நகரிலிருந்த சாந்தீபீனி என்னும் அந்தணர்பக்கல் சகல சாத்திரங்களையும் கற்றான். குருதட்சிணை கொடுக்கும் நிலையில் இருந்தான். அவ்வாசிரியர் கண்ணனுடைய ஆற்றல் சிறப்பை அறிந்தவராகையால் பன்னிரண்டு ஆண்டுகட்கு முன்பு மேற்குக் கடலில் பிரபாச தீர்த்தத் துறையில் நீராடும்போது மூழ்கி இறந்துபோன தன் மகனைக் கொண்டு வந்து தர வேண்டும் என்று தன் விருப்பத்தைத் தெரிவித்தார். கண்ணபிரானும் அப்படியே செய்கின்றேன்' என்று ஒப்புக்கொண்டு கடல் நீரில் வாழ்கின்ற பஞ்சஜனன்' என்ற அசுரனே அவ்வந்தனச் சிறுவனைக் கொண்டு போயினன் என்பதை வருணனால் அறிந்து, கடலில் இறங்கி அவ்வசுரனைக் கொன்று அவன் உடலாகிய பாஞ்ச சன்யத்தை எடுத்து வாயில் வைத்து முழக்கிக் கொண்டு யமபுரிக்கு எழுந்தருளி அங்கு யாதனை யிற் கிடந்த அந்தச் சிறுவனை அவன் இறந்தபோது கொண்டிருந்த உருவம் மாறாதபடி கொண்டுவந்து தட்சிணையாகக் கொடுத்தான். :கடலில் மூழ்கிய குமாரனை மீட்டுக் கொடுத்தருளியதுபோல, சம்சார சாகரத்தில் மூழ்கிய என்னை மீட்டுப் பாதுகாத்தருள வேண்டும்' என்பது இப்பாட்டுக்குக் கருத்தாகக் கொள்ளத் தகும். இந்த இதிகாசம் பெரிய திருமொழி 5.8.7 லிலும் வந்துள்ளது. 5 வேயர்தங்கள் குலத்துதித்த விட்டுசித் தன்மனத்தே கோயில்கொண்ட கோவலனைக் கொழுங்குளிர் முகிழ்வண்ணனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/57&oldid=921402" இலிருந்து மீள்விக்கப்பட்டது