பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வை.டி.இ.இருசமயவிளக்கம்


அஞ்சலித்தல், பின்னர் அவர் தமைப் புகழ்தல், தவிர்த்திடலும் வேண்டும்” எனப் பீதகவாடைப் பன்னக மாசயனத்தோன் பார்த்தனுக்குச் சொன்னது பாரதத்தில் கூறும். ஒரு பாட்டு இரண்டு பாட்டல்ல-நூல் முழுதும் பக்கம் பக்கமாக இப்படியே உள்ளது. பள்ளி மாணாக்கர்கள் கட்டுரைப் பயிற்சி போன்றது. மின்வெட்டு போன்ற கவிதைகள் மருந்துக்குக்கூட இங்கு காணப்படாது போயினும் ஆற்றொழுக்கு போன்ற நல்ல உரைநடையைக் காண்கின்றோம். ஆயினும் அரிதாசரின் நல்ல சமயத் தொண்டாக இது திகழ்கின்றது.

காலம்: அரிதாசர் காலம் கிருட்டிண தேவராயர் காலமே (1497-1540) என்பது அவர் சரித வரலாற்றால் நன்கு விளங்கும். இவர் தமையனாரான வடமலையண்ணனைக் குறிப்பிடும் சாசனங்கள் 1514, 1523 முதலான ஆண்டுகளில் எழுந்தன. தமையனை இவர் தம் நூலுள்ளும் குறிப்பிடுகின்றார். ஆதலால் இவர் காலம் இக்குறிப்புகளுக்குப் பொருத்தமானது (1500-25 என்று கொள்வது பொருந்தும்.

101