பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணவரைத் திருத்திய காரிகை 97 பலவாகத் தொடர்ந்து இருந்தது. இதல்ை இவர்கள் உடன் உறை வாழ்வின்றி ஒழுகுவாரானர். இவர்கள் எது முதல் எதுவரை இன்னணம் பொற்புற மெய் யுருது பொலிந்துவந்தனர் என்பதைக் கற்பனைக்கு ஊற்ரும் துறைமங்கலத் துறவியார் சிவப்பிரகாசர், படர்முதிர் வேனில் பகற்கொடும் பால நிலத்துர்ே வேட்டோன் நீர்அரி தினில்பெற் றுண்புழி உண்ணு தொல்லயில் தடுக்கும் செயலென வெமைங் தீண்டேல் என்று கின்மேல் ஆணே நிகழ்த்திட நீங்கிப் புணரியுண் டெழுந்த புயல்கிகர் வளர்குழல் அஃதுளு முகின்போன் றழகுறுங் காறும் திண்டா தொருபூஞ் சேக்கையிற் துயின்று மாரு அன்பு வளர்மனத் தவர். என்று அழகுறத் தெளிவித்துள்ளார். அதாவது அம்மையாரது கருங்குழல் குல்கொண்ட மேகம் போன்று இருந்த இளமைக் காலந்தொட்டுக் கரு வுருத வெண்முகில் போல முடி துலங்கும் காலமாகிய முதுமைப் பருவம் காறும் இந் நோன்பினை மேற் கொண்டனர் என்பதாம். இதுவன்ருே தூய நெறி என்பது? இவ்வாறு பல்லாண்டுகள் கழிந்தும் கருத்துக் குகந்த காரிகையார் தமக்கு இட்ட கட்டளையைத் தட்டினரில்லே திருநீலகண்டர். பிற மாதராரை மனத்தாலும் எண்ணினர் இல்லை. காரிகையார் திருத் தினர். கணவரும் திருந்தினர். இத்தகைய சீரிய செயலை இவ்வம்மையார் செய்தமையின், இம்மாதரா ரைக் கணவரைத் திருத்திய காரிகை என்று கருதிக் கூறியது சாலவும் பொருத்தமே அன்ருே? 7